ஒரு சமூகத்தின் விழிப்பிற் கும் வளர்ச்சிக்கும் அடிநாதமாக அமையக் கூடியது கல்வியே என்பதை நன்குணர்ந்த பண்பாட்டு வளர்ச்சிக்கும் வழிகோலினார். அத்தகையோருள் ஒருவர் திரு. கந்தர் காங்கேசு ஆசிரியர் அவர்கள். ஊர்மக்களால் காங்கேசு வாத்தியார் என பணிவன்புடன் அழைக்கப்பட்ட இவர் தனது சிற்றூரான வேலணை கிழக்குப் பிள்ளைகளின் கல்விகற்பதற்காக வேலணை மேற்கு சைவப்பிரகாச வித்தியாலயத்திற்கோ,
சரஸ்வதி வித்தியாலயத்திற்கோ வெகுதூரம் வளர்ச்சிக்கும் அடிநாதமாக அமையக் கூடியது. கல்வியே என்பதை நன்குணர்ந்த கண் தேவதை அடைந்தார். நீண்டகாலம் நடந்து செல்லமுடியாமையால் பல சிறார்கள் உரிய வயதில் கல்வியை ஆரம்பிக்க முடியாத துரதிஷ்ட நிலைமையும் கண்டு பண்பாட்டு வளர்ச்சிக்கும் வழிகோலினார். ஆற்றாது தனது சிற்றூரிலேயே ஒரு பாடசாலை அமைக்கப்பட வேண்டும் என்று உறுதி கொண்டு வேலணை அம்மன் ஆலயத்தில் தெற்கு வீதியை மருவி இருந்த 17 1/2 பரப்பு விசாலமான காணி கிடக்குப் பிள்ளைகள் கல்விகற்பதற்காக வேலணை மேற்கு சைவப்பிரகாச வித்தியாலயத்திற்கோ, இன்று தனது சொந்தச் செலவிலேயே வேலை வாங்கலாவியில் அமைந்துள்ள கட்டடங்கள் அமைத்து, தேவையான தளபாடங்கள் செய்வித்து, ஒரு பாடசாலைக்குரிய அனைத்து வளங்களையும் தமது சக்திக்கு ஏற்றவகையில் ஏற்படுத்தி அக்காலத்தில் இலங்கை சட்டசபையில் சபாநாயகராக இருந்தவரும் ஊர்காவற்றுறைத் தொகுதி பிரதிநிதியுமான சேர். வைத்தியலிங்கம் துரைசாமியின் உதவியுடன் இப்பாடசாலைக்குரிய காணி உட்பட அனைத்து வளங்களையும் அரசாங்கத்திற்கு வழங்கினார்.
அரசாங்கம் பாடசாலையைப் பொறுப்பேற்று 1946 ஆம் ஆண்டு யூன் மாதம் 10 ஆம் திகதி இப்பாடசாலை வேலணை கிழக்கு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை என்ற பெயருடன் சேர். வைத்தியலிங்கம் துரைசாமி அவர்களால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலையின் தலைமையாசிரியராகப் பாடசாலையின் கர்த்தாவான திரு. கந்தர் காங்கேசு நியமிக்கப்பட்டார். அவருடன் அக்காலத்தில் திறமைமிக்க ஆசிரியர்களாகப் போற்றப்பட்ட பண்பிதர் க. இராசையா, திரு. ம. க. சுப்பிரமணியம் (பின்னாளில் நெடுந்தீவாக இருந்தவர்) ஆகியோர் உட்பட ஆறு ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டனர். ஆரம்பத்திலேயே இப்பாடசாலையில் 180 மாணவர்கள் கல்வி பயின்றமை ஒரு குறிப்பிட்டத்தக்க சிறப்பம்சமாகும்.
ஊரின்மீதும் பிள்ளைகள் மீதும்
அன்பும் கரிசனையும் கொண்ட அதிபரும், ஆற்றல் மிக்க ஆசிரியர்களும் இப்பாடசாலையில் இருந்தமையால் பாடசாலைச் சூழலிலிருந்து மட்டுமன்றி தொலைவில் இருந்தும் பிள்ளைகள் இப்பாடசாலையை நாடிவரத் தொடங்கினர். இதனால் மாணவர்தொகை படிப்படியாக உயர்வடைந்தது. மாணவர்கள் தொகைக்கேற்ப கட்டடங்களை விரிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. 1951ஆம், 52ஆம் ஆண்டுகளில் இரண்டு நிரந்தரக் கட்டிடங்களும் அதிபர் விடுதியும் அன்றைய எமது தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினர் திரு. A. L. தம்பையா அவர்களின் முயற்சியால் அமைத்துக் கொடுக்கப்பட்டன.
ஐம்பதுகளின் நடுப்பகுதியில் திரு. காங்கேசு அவர்கள் வெளிமாவட்டத்திற்கு இடமாற்றம் பெற்றுச் செல்ல, திரு. காரைச்சந்தரம்பிள்ளை அவர்கள் அதிபராக நியமிக்கப்பட்டார். சுறுசுறுப்பும் சமயப்பற்றும் சேவை மனப்பான்மையும் கொண்ட திரு. சுந்தரம்பிள்ளை அவர்கள் திரு. காங்கேசு அவர்களின் எதிர்பார்ப்பை உணர்ந்தவராகப் பாடசாலையைத் திறம்பட நடத்தி வந்தார்.
ஐந்து ஆண்டுகளின் பின்னர் திரு. காங்கேசு அவர்கள் மீண்டும் இப்பாடசாலைக்கு அதிபராக இடமாற்றம் பெற்றுவந்தார். பாடசாலை வளர்ச்சியில் மீண்டும் வேகமெடுத்தது. இக்காலத்தில் திரு. கணபதிப்பிள்ளை, திரு. ஐ. பேரம்பலம், திரு. சிவலோகநாதன், திருமதி...