கனடா வாழ் வேலணை மாணவர்களுக்கான புலமைப்பரிசில் – விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன
வேலணை மக்கள் ஒன்றியமானது, கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக வேலணையில் உள்ள மாணவர்களின் கல்விச்செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்கிவருகின்றமையினை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
அச்செயற்பாடுகளின் தொடர்ச்சியாகக், கனடாவில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற வேலணையைப் பூர்வீகமாகக் கொண்ட மாணவர்களினதும் கல்விச் செயற்பாடுகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில், நன்கொடையாளர்களின் அனுசரணையோடும் ஆர்வலர்களின் வேண்டுதல்களுக்குமேற்ப, உயர்தரவகுப்புகளில் அதிகூடிய பெறுபேறுகளைப் பெற்றுப் பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களுக்கான புலமைப்பரிசில்திட்டம் ஒன்றினை இந்த ஆண்டிலிருந்து அறிமுகப்படுத்தியிருக்கின்றோம் என்பதைப் பேருவகையுடன் அறியத்தருகின்றோம்.
இப்புலமைப்பரிசில்த் திட்டமானது, இங்கே வாழும் இன்றைய இளஞ்சந்ததியினரும் எதிர்வரும் காலங்களில் வேலணைப்பிரதேசத்தின் வளர்ச்சியில் பங்கேற்பதனை ஊக்குவிக்குமென நம்புகின்றோம்.
முதலாவது அதிகூடிய பெறுபேற்றுக்கு $3000.00 CAD புலமைப்பரிசிலும்
இரண்டாவது அதிகூடிய பெறுபேற்றுக்கு $2000.00 CAD புலமைப்பரிசிலும்
மூன்றாவது அதிகூடிய பெறுபேற்றுக்கு $1000.00 CAD புலமைப்பரிசிலும்
அடுத்த ஏழு அதிகூடிய பெறுபேறுகளுக்கும் தலா $500 CAD புலமைப்பரிசிலும் வழங்கப்படும்.
இப்புலமைப்பரிசிலிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர், இதனுடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தினைப் பூர்த்தி செய்து vpoglobal@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு செப்ரம்பர் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
விண்ணப்பம் தரவிறக்கம்(Download)
நன்றி!
Velanai People Organization Scholarship Committee