வேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு – ஜூன் 30, 2018
வேலணை மக்கள் ஒன்றியத்தின் நிதியனுசரணையுடன் நடத்தப்பட்டு வரும் புலமைப்பரிசில் பரீட்சைக்கான தொடர் வழிகாட்டல் கருத்தரங்கு வரிசையில் 30/06/2018 அன்று நடைபெற்ற கருத்தரங்கில் யாழ்ப்பாணத்தின் பிரபல ஆசிரியர் திரு. கலாபவன் அவர்கள் வளவாளராக கலந்து சிறப்பித்துள்ளார்.
இந்நிகழ்வின் தலைமையுரையினை வேலணை மக்கள் ஒன்றியத்தின் தலைவரும், ஆசியுரையினை உபசெயலாளரும் ஆற்றினர். வேலணை மக்கள் ஒன்றியத்தின் செயலாளர் காண்டீபன், உறுப்பினர்களான பிரபா மற்றும் கஜேந்திரன் ஆகியோரும் இக்கருத்தரங்கில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.