ஜூலை 21, 2018 – வேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு
வேலணை மக்கள் ஒன்றியத்தினால் பிரதி சனிக்கிழமைகளில் தரம்5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கின் தொடர்ச்சியாக இன்றையதினமும் வேலணைப்பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் கருத்தரங்கு நடைபெற்றது இன்று சுமார் 145 மாணவர்கள் கருத்தரங்கில் பங்கேற்றுக்கொண்டதுடன் வளவாளராக யா/கீரிமலை நகுலேஸ்வர மகாவித்தியாலய அதிபர் திரு த தயானந்தன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு கட்டுரையாக்கம் தொடர்பான தகவல்களையும் நுட்பங்களையும் வழங்கினார்.
மேலும் மாணவர்களுக்கு பயிற்சி வினாத்தாள் வழங்கப்பட்டு விளக்கமளிக்கப்பட்டது இன்றைய கருத்தரங்கிற்கான பூரண நிதியனுசரணையை எமது வேலணை மக்கள் ஒன்றிய உறுப்பினரும் யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாக நூலகருமான திரு சண்முகதாசன் வழங்கினார் தொடர்ந்து எதிர்வரும் 28 ம்திகதி சனிக்கிழமை இறுதி விசேட கருத்தரங்கு நடைபெறும்