வேலணை மக்கள் ஒன்றியத்தின் தரம் 5 மாணவர்களுக்கான செயலமர்வு – ஜூலை 07, 2018
வேலணை மக்கள் ஒன்றியத்தினால் பிரதி சனிக்கிழமைதோறும் தரம் 5 மாணவர்களுக்கு நடாத்தப்பட்டுவரும் புலமைப்பரிசில் பரீட்சைக்கான வழிகாட்டல் கருத்தரங்கின் தொடர்ச்சியாக 7/7/2018 சனிக்கிழமை மற்றுமொரு கருத்தரங்கு நடத்தப்பட்டது
இக்கருத்தரங்கிற்கு யாழ் புனித பரியோவான் கல்லூரி ஆசிரியர் திரு சபேசன் அவர்கள் வளவாளராக கலந்துகொண்டார். முன்னதாக வேலணை மக்கள் ஒன்றியத்தின் நிதியனுசரணையில் சுற்றாடற்கையேடு வெளியிடப்பட்டு அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது.
இவ்வெளியீட்டு நிகழ்வில் வேலணை ஒன்றியத்தின் (ஐரோப்பா) தலைவர் திரு யெகநாதன் அவர்களும் சமூகப்பணியாளர் திரு செல்வம் ஐயா அவர்களும் விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் விருந்தினர்கள், வளவாளர், வேலணை மக்கள் ஒன்றியத்தலைவர், ஆசிரியர், பெற்றோர், மாணவர் ஆகியோர் மங்கலவிளக்கை ஏற்றிவைத்தனர். அதைத்தொடர்ந்து வரவேற்புரையை வேலணை மக்கள் ஒன்றிய உபசெயலாளர் திரு கயேந்திரகுமார் அவர்களும் தலைமையுரையை தலைவர் திரு அரசரட்ணம் அவர்களும் நிகழ்த்தினர். வாழ்த்துரைகளை திரு யெகநாதன், திரு செல்வம் ஐயா ஆகியோர் நிகழ்த்தினர். அதன்பின்னர் நூல் அறிமுகவுரையை மண்டைதீவு றோ க வித்தியாலய ஆசிரியர் திருமதி. வ. கபிலராணி நிகழ்த்தினார். இவ்வுரைகளினைத்தொடர்ந்து மாணவர்களுக்கு கையேடு வழங்கிவைக்கப்பட்டது. வேலணை மக்கள் ஒன்றிய செயலாளர் திரு ப காண்டீபன் நன்றியுரை நிகழ்த்தினார் அதனையடுத்து கருத்தரங்கு நடைபெற்றது.
இக்கருத்தரங்கங்களிற்கு வேலணைப் பிரதேச செயலகம், மாணவர்களின் நலன்கருதி மாநாட்டு மண்டபத்தை மட்டுமல்லாமல் பல்லூடக-எறிகருவி மற்றும் உள்ளக ஒலிபெருக்கித்தொகுதியையும் வழங்கியுள்ளனர் இக்கருத்தரங்கின் தொடர்ச்சி எதிர்வரும் சனிக்கிழமையன்று நடைபெறும்.