புலமைப்பரிசில் 2018 பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்களையும் ஆசிகளையும் தெரிவிக்கின்றோம்
எதிர்வரும் 5ம் திகதி புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்களையும் ஆசிகளையும் தெரிவிப்பதுடன் குழந்தையின் வாழ்வில் எதிர்கால முன்னேற்றத்திற்கான படிக்கற்களாக அமைவது புலமைப்பரீட்சையாகும். ஒவ்வொருவரின் விடாமுயற்சியையும் கல்வியில் மேல் நிலைக்கு வரவேண்டும் என்ற ஊக்கமும் விடாமுயற்சியும் ஆற்றல் மிக்க பிரஜைகளாக உருவாகாக்கும் என்று நாம் நம்புகின்றோம் தன்னம்பிக்கையுடனும் பதற்றமின்றியும் பரீட்சைக்குத் தோற்றி வெற்றியடைய வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் மேலும் மேலும் வளர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கின்றோம்.
இத்தருணத்தில் எங்கள் செயலமர்வுக்கு உதவி புரிந்த அனைத்து உள்ளங்களுக்கும் எங்கள் நன்றிகளையும் தெரிவிக்கின்றோம்.
வாழ்க வளமுடன்
வேலணை மக்கள் ஒன்றியம்