வேலணை மக்கள் ஒன்றியத்தின் மூலம் ஆசிரியர்கள் நியமனம்
வேலணை மக்கள் ஒன்றியத்தின் கல்வி சேவைத்திட்டத்தின் மூலம் இரண்டு பாடசாலைகளுக்கு முதற்கட்டமாக மூன்று
ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அதாவது யா/வேலணை கிழக்கு மகா வித்தியாலயத்திற்கு விஞ்ஞான படத்திற்காக ஒருவரும் .யா/வேலணை கிழக்கு செட்டிபுலம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு ஆரம்ப வகுப்புக்களுக்கான இரண்டு ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ் நியமனமானது இப்பகுதியில் வசிக்கும் மாணவர்களின் கல்விச்செயற்பாட்டை முன்னேற்றும் கொள்கையின் அடிப்படையில் ஆசிரியர்களின் நியமனங்கள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.