வேலணை சைவப்பிரகாச வித்தியாசாலை
சைவப்பிரகாசத்தின் பாரம்பரிய வரலாற்றுப் பெருமைகள் தொடர்ந்தும் பேணப்படவேண்டும். பாடசாலையின் மதில்கள் எல்லாம் அழிவடைந்து கிடக்கின்றன. தற்போதைய நிலையை
மாற்றி பெளதிக வளவசதிகள் மேலும் மேம்படுத்தப்பட வேண்டும்.
வித்தியாலயம் பண்டைய பெருமைக்கு உயர்வதற்கு மக்கள் மீள் குடியேறுவது முக்கியமானது. இயல்பு வாழ்க்கை யாழ் குடா நாட்டில் ஏற்படும்போது தீவகத்திலும் இந்நிலைமைகளில் மாற்றங்கள் ஏற்படும். குறிப்பாக இவ்வித்தியாலயத்தின் அயலில் உள்ள கடற்படை முகாம் வேறிடத்திற்கு மாற்றப்பட்டு பிரதான போக்குவரத்துப் பாதை மக்கள் போக்குவரத்திற்காக அனுமதிக்கப்பட வேண்டும். அப்போது தான் பாடசாலைகளும் சுமுகமான சூழ்நிலையில் இயங்க முடியும். அக்காலம் எப்போது வருமென்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். கூடிய விரைவில் அக்காலம் வரவேண்டும் என சைவப்பிரகாசம் வித்தியாசாலை சமூகம் எதிர்பார்க்கின்றது. ஒளிநிறை அப் பொற்காலம் காண நாமும் காத்திருப்போமாக.
மூலம் : வேலணை வரலாற்று அறிமுகம் (First Edition 2006)
நன்றி : noolaham