வேலணை சைவப்பிரகாச வித்தியாசாலை
1995 பிற்பகுதியில் ஏற்பட்ட அமைதியற்ற சூழ்நிலையில் வலிகாம மக்கள் வரலாறு காணாத மாபெரும் இடப்பெயர்வை சந்தித்தனர். யாழ்ப் பாணத்தில் இருந்து மக்கள் எல்லோரும் தென்மராட்சி நோக்கிய இடப்பெயர்வை மேற்கொண்டனர். பாடசாலையும அதிபர், ஆசிரியர்களும் இடம்பெயர்ந்தனர். அங்கும் யாழ் மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலயத்தில் மாலை நேரப்பாடசாலையாக இயங்கியது. யாழ் நகர் நோக்கி மக்கள் மீள்வருகையை தொடர்ந்து 1996 இல் தீவகம் நோக்கிய மீள்திரும்புகையும் ஏற்பட்டது. ஆட்கள் நடமாட்டமற்ற வேலணைப்பகுதியில் மீளவும் கல்வி என்னும் நிகழ்வை ஏற்றும் முயற்சிகள் ஆரம்பிக் கப்படலாயின. அப்போதும் “சைவப்பிரகாசம்” தனது காத்திரமான பங்கை தொடங்கியது. மத்தியகல்லூரி, சைவப்பிரகாசம் என்பவற்றின் பாடசாலைக் கட்டிடங்கள் இராணுவ முகாம்களாக இருந்தன. இதனால் வேலணை கொத்தணிப் பாடசாலைகள் சில சேர்ந்து வேலணை கிழக்கு மகா வித்தியாலயத்தில் ஒன்றாக இயங்கின. 51 மாணவர்களுடன் பாடசாலைகள் மீள் உருவாக்கம் பெற்றன.
படிப்படியாக சைவப் பிரகாசம் சிலகாலம் சரஸ்வதி வித் தியாசாலை கட்டிடத்தில் தனித்துவமாக இயங்கியது. புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பின்னர் பாடசாலைகளில் இருந்து இராணுவத்தினர் விலகினர். 2003 ஜனவரி மாதத்தில் சைவப்பிரகாசம் தனது சொந்தக்கட்டிடத்தில் இயங்கத்தொடங்கியது.மாணவர் எண்ணிக்கை குறைவாக இருந்த போதும் படிப்படியாக கல்விச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. G.T.Z நிறுவனம், ஏனைய நிறுவனங்களின் உதவியினால் பெளதீகவள விருத்திகள் ஏற்பட்டு வருகின்றன. சேதமடைந்த 60 x 20 நீளமான கட்டிடம் புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளது.
பாடசாலையின் பிரதான வீதி மக்கள் அனைவரது போக்குவரத்திற்கும் தடை செய்யப்பட்டிருப்பதாலும் பஸ் போக்குவரத்து நடைபெறாததாலும் பாடசாலை பெரும் தடைகளை எதிர் நோக்குகின்றது. பாடசாலைச் சூழலிலும் மக்கள் இன்னமும் குடியேறாத நிலையில் சூனியப்பிரதேசம் ஒன்றில் பாடசாலை இயங்கும் ஒரு நிலை காணப்படுகிறது. யுனிசெவ் நிறுவனத்தின் உதவியுடன் குடிநீர் விநியோக வசதிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன. –