வேலணை சைவப்பிரகாச வித்தியாசாலை
இடம்பெயர்நிலையிலும் முன்னாள் அதிபர்களான திரு. சு. கலாதரன், திரு. பொ. சபாரத்தினம், திருமதி. தியாகராசா (ஆசிரியர்) ஆகியோருக்கான பிரியாவிடை நிகழ்ச்சியை நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்தில் சைவப்பிரகாச சமூகம் செய்து பெருமை பெற்றது. யாழ் புனித மரியாள் வித்தியாலய மைதானத்தில் இல்ல விளையாட்டுப் போட்டியை பல தடவை நடாத்தியது.
கல்விக் கண் காட்சி, ஆங்கிலதினம், உடற்பயிற்சிப் போட்டிகள், ஆசிரியர்தினம் ஆகிய அனைத்து நிகழ்ச்சிகளையும் சைவப்பிரகாச சமூகம் தொடர்ந்து செய்து வந்தது. கல்விப் பெறுபேறுகளிலும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, க. பொ. த. (சாத) பரீட்சை ஆகியவற்றில் நல்ல பெறுபேறுகள் பெற்று வேலணைக் கோட்டத்தில் ஒரு முதன்மைப் பாடசாலையாக திகழ்ந்தது மாத்திரமன்றி யாழ் மாவட்டத்தில் பலரது பாராட்டையும் வாழ்த்துக் களையும் பெற்ற ஒரு பாடசாலையாக திகழ்ந்தது.
காலப்போக்கில் பட்டப்படிப்புகள் கல்லூரிக் கு அருகில் இருந்த வைத்திலிங்கம் கொம்பனிக்கு சொந்தமான கட்டிடமொன்றில் தற்காலிக கொட்டில்கள் அமைத்து வித்தியாலயம் தனது பெயருடன் மேலும் உறுதியுடன் வளர்ச்சி பெற்றது. 1992 – 1995 காலப்பகுதியில் பாடசாலை பல நிலைகளில் தனது வெற்றியைப் பதித்து வந்தது. பாடசாலையில் பிரதி அதிபராக கடமையாற்றிய செல் வி. பாலசரஸ்வதி அம்பலவாணர் அவர்களின் பணி போற்றுதற்குரியது. இக்காலத்தில்ஆசிரியர்கள் திரு. க. நவநேசன், திரு. க.கதிரேசபிள்ளை, திரு. ஞா. இரட்ணசிங்கம், திரு. S. D. இம்மானுவேல், திருமதி. இ. ஞானரட்ணம், திருமதி. ம. சுகுமார், திருமதி. ஜெ. சாந்தன் ஆகியோர் பெரிதும் முயன்று தமது ஆற்றல் களை பாடசாலைக்கு வழங்கினார்கள்.