வேலணை சைவப்பிரகாச வித்தியாசாலை
இவரின் திடீர் மரணத்தை அடுத்து பின்னர் திரு. செ. வரதலிங்கம் அவர்கள் அதிபராக நியமிக்கப்பட்டு 22-09-1989 வரை கடமையாற்றினார். அவருடைய அகால மரணத்தைத் தொடர்ந்து திரு. சு. கலாதரன் அவர்கள் அதிபராக கடமையேற்று 28 -01-91 வரை கடமையாற்றினார். அவருடைய இடமாற்றத்தைத் தொடர்ந்து திரு. பொ. சபாரத்தினம் அவர்கள் இரண்டு மாதம் கடமையாற்றினார்.
மீளவும் திரு. சு. கலாதரன் 1991 இல் அதிபராகக் கடமையாற்றினார். அவரின் பினர் 25-11-91 இல் திரு. பொ. அருணகிரிநாதன் அதிபராக கடமையேற்றார். திரு. பொ. அருணகிரிநாதன வேலணை சேர் வைத்திலிங்கம் மத்திய மகாவித்தியால யத்திற்கு அதிபராகக் கடமையேற்றதைத் தொடர்ந்து தற்போதைய அதிபரான திருமதி. வி. நாவேந்தன் அதிபராகப் பொறுப்பேற்று கடமை ஆற்றி வருகின்றார்.
இவ்வித்தியாசாலை ஆரம்பத்தில் ஐந்தாம் வகுப்பு வரை இருந்து பின்னர் படிப்படியாக எஸ்.எஸ்.சி. வரை வகுப்புக்கள் நடைபெற்றது. 1945 வரை இந்நிலை நீடித்தது. பின்னர் வேலணை மத்திய கல்லூரி அமைந்தமையால் மேல் வகுப்புக்கள் நீக்கப்பட்டன. 5 ஆம் வகுப்பு சித்திபெற்ற பிள்ளைகள் அக்கல்லூரிக்கே சென்றனர். காலஞ் செல்ல கல்வித் திணைக்கள கொள்கையின் படி 1956 ஆம் ஆண்டு தொடக்கம் மீண்டும் 6 ஆம் வகுப்பு முதல் வருடா வருடம் மேல் வகுப்புக்கள் அமைக்கப்பட்டன.
1961 ஆம் ஆண்டு அரசினால் சுவீகரிக்கப்பட்ட போது இப்பாடசாலை 10 ஆசிரியர்களையும் 287 மாணவர்களையும் கொண்டிருந்தது. அந்நிலை படிப்படியாக வளர்ச்சியடைந்து 1980 ஆம் ஆண்டு 24 ஆசிரியர்களையும் 700 ற்கு மேற்பட்ட மாணவர்களையும் கொண்டதாக வளர்ந்தது. பாலர் வகுப்புத் தொடக்கம் க.பொ.த.சா. தரம் வரை அமைந்திருந்தது. இவ்வித்தியாசாலையில் ஆரம்ப வகுப்பில் பிள்ளைகளைச் சேர்ப்பதற்கு பெற்றோர் பெரிதும் விரும்புவர்.