வேலணை சைவப்பிரகாச வித்தியாசாலை
சதா அதிபர் திரு. அ. வைரமுத்து
செல்லையா உபாத்தியாயர் என்று எம்மவர்களால் அன்புடன் அழைக்கப் பெற்ற மறைந்த பேரன்பர் திரு, அ. வைரமுத்து அவர்கள் 1931ஆம் ஆண்டு இப் பாடசாலைக்கு அதிபராக வந்தவர். அவர் 1970 ஆம் ஆண்டு வரை சதா அதிபராகவே இருந்து வித்தியாசாலைக்கு அளப்பரிய சேவையை ஆற்றினார். சுமார் நாற்பது ஆண்டுகள் கடமையாற்றிய அவரிடம் கல்வி கற்றவர்கள் நம்மூரில் பலர் உளர். நாற்பது ஆண்டு அவர் தம் பணியை நாம் நாலு வரிகளில் கூறிவிட முடியாது. நம்மவர்கள் அனைவரும் அவரின் பணியினை எடுத்தியம்புவதை காதாரக் கேட்கலாம். திரு. அ. வைரமுத்து அவர்கள் ஓய்வு பெற 1970 ஆம் ஆண்டு தொடக்கம் 1971 ஆம் ஆண்டு வரை திரு. க. காங்கேசு அவர்கள் அதிபராகக் கடமையாற்றினார். அவர் இங்கு சில காலமே அமர்ந்திருந்தார்.
அதிபர் திரு. ச. சிதம்பரப்பிள்ளை
1971 ஆம் ஆண்டு அதிபராக வந்த அதிபர் திரு. ச. சிதம்பரப்பிள்ளை அவர்கள் நாவலர், கந்தப்பர் ஆகியோரின் எண்ணத்தின் படி சைவத்தையும், தமிழையும் தழைத் தோங்கச் செய்ய மிகப்பொருத்தமானவராக விளங்கினார். நாவலர் போன்று “நைட்டிகப் பிரமச்சரியாக விளங்கிய இவர்” தம் முழுநேரத்தையும் பாடசாலைக்கும் கற்கும் மாணவர்களுக்கும் அர்ப்பணித்து இவ்வித்தியாசாலைக்கு ஒரு தனிப்பெயரை ஏற்படுத்தினார். இவருடைய காலத்தில் கல்வித்துறையில் மாணவர் களிடையே ஊக்கம் மிளிர்ந்தது. உடலாலும் உள்ளத்தாலும் இளமையுடன் விளங்கினும் ஆண்டுகளினால் ஓய்வுபெறும் வயதைப் பூர்த்தி செய்ததால் இவர் 1977 இல் ஓய்வு பெற்றார்.
திரு. ச. சிதம்பரப்பிள்ளையவர்களின் ஓய்வையடுத்து திரு. செ. வரதலிங்கம் சில மாதங்கள் அதிபராக விளங்கினார். ஆயின் திரு. ச. சிதம்பரப்பிள்ளை மீண்டும் சேவை நீடிப்புப் பெற்று வந்தார். பின்னர் 1978 பெப்ரவரி 28 இல் ஓய்வு பெற்றுச் செல்ல அதிபரின் கடமைகளை திரு. கா. காசிப்பிள்ளை ஆற்றினார். பெற்றார் ஆசிரியர் சங்கம் இவ்வித்தியாசாலைக்கு நிரந்தர அதிபர் நியமிக்கப்பட வேண்டும் என்று அரிதின் முயன்றதன் பயனாக 1978 ஆம் ஆணி டு வைகாசி 3 ஆம் திகதி தொடக்கம் திரு. மு. திருஞானசம்பந்தப் பிள்ளை அதிபராக நியமிக்கப்பட்டார். இவர் 18 – 07 – 1983 வரை கடமையாற்றினார். இவரின் பின் திரு. வை. இராமகிருஷ்ண ஐயர் அவர்கள் 15-09-85 வரை கடமையாற்றினார்.