வேலணை சைவப்பிரகாச வித்தியாசாலை
வித்தியாசாலையில் சைவமும் தமிழும் கற்க மாணவர் ஆர்வத்தோடு சேர்ந்தனர். உள்ளும் புறமும் சைவாசிரியர்களாகத் திகழ்ந்தவர்கள் கற்பித்தலை நடத்தினர். கந்தப்பிள்ளையவர்கள் பின்னும் அரிதின் முயன்று பல இடைஞ்சல்களுக்கு இடையே பள்ளிக்கூடத்தை அரசினர் நன்கொடைக்குரியதாகப் பதிவு செய்ய முயன்றனர். அவர்களுடைய முயற்சி 1883 ஆம் ஆண்டில் நிறைவெய்தியது. கந்தப்பிள்ளையவர்களே பாடசாலைக்குரிய முகாமையாளராகவிருந்து பாடசாலையை அரிதின் முயன்று வளர்த்து வந்தார். 1884 ஆம் ஆண்டு பள்ளிக்கூடம் ஓலைக்கூரை, மரத்துண், நாற்புறமும் அரைச்சுவர், சுவர் சாந்துக்கட்டு, மணி தளம் கொண்டமைந்தது. பின்னர் கட்டடம் சேதமுற 60 x 30 கொண்ட நீளக்கட்டிடம் சாந்துத் துாணி களைக் கொணி டு நிறுவப்பெற்றது.
பிள்ளையவர்கள் பள்ளிக்கூடத்திலே நாயன்மார் குருபூசைகள் நடத்தப்பட வேண்டும் என்று அதற்காக பாடசாலை முற்புறத்தில் மடம் ஒன்று அமைத்து நால்வர் குருபூசைகளைத் தவறாது நடாத்தி வந்தார். பல ஆண்டுகள் இவ்வாறு சைவமும், தமிழும் சைவப்பிரகாச வித்தியா சாலையில் தழைத்தோங்கப் பரிபாலித்து வந்த பெரியார் 1914 ஆம் ஆண்டு தை மாதப் பூர்வ பட்ச ஏகாதசியன்று குஞ்சிதயாத நிழற்கீழ் சென்றடைந்தார்.
முகாமைத்துவம்
பிள்ளையவர்களின் பின் பள்ளிக்கூட முகாமை அவர்தம் மகன் அம்பலவாண பிள்ளையிடம் சேர்ந்தது. இடையே பாடசாலைப் பரிபாலனத்திற்காகச் சில காலங்களில் முகாமை திரு. சே. பொன்னையா, திரு. ச. திருஞானசம்பந்தப் பிள்ளை ஆகியோரிடம் போய் வந்தது. ஆயினும் 1940 ஆம் ஆண டில் அம்பலவாண பிள்ளையவர்கள் இவ்வுலக வாழ்வை நீத்தபோது முகாமைத்துவம் அவரால் அமைக்கப்பெற்ற வேலணை சைவப்பிரகாச சங்கத்திற்கு மாறியது. சில ஆண்டுகளின் பின்னர் முகாமைத்துவம் சைவ வித்தியா விருத்திச் சங்கத்தின் கீழ் இருந்தது. பின்னர் கந்தப்பிள்ளை அவர்களின் சாசனத்திற்கு இணங்க நீதிமன்றக் கட்டளைப்படி அவர்தம் சந்ததியினருக்கு முகாமைத்துவம் மீள வரவே 01-11-1954 ஆம் ஆண்டு தொடக்கம் அரசாங்கம் பாடசாலைகளைச் சுவீகரித்த 03-11-1961 ஆம் ஆண்டுவரை திரு. மு. மயில் வாகனம் அவர்கள் முகாமையாளராக விளங்கினார்.