க.பொ.த. சாதாரண பரீட்சையில் எதிர்பார்த்தபெறுபேறுகளைப் பெறாத மனவிரக்தியில் மாணவி அகாலமரணம்
வேலணை மத்திய கல்லூரி மாணவியும், வேலணை துறையூர் பிரதேசத்தினை சேர்ந்த அருட்பிரகாசம் றேணுகா (வயது – 16) க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் எதிர்பார்த்த பெறுபேறுகளைப் பெறாத மனவிரக்தியில் அகாலமரணத்தை தழுவியுள்ளார். 1A, 7B,S என்ற பெறுபேற்றினை பெற்ற மாணவியே இவ்வாறு அகாலமரணத்தை தழுவியுள்ளார். இன்று (03.04.2017) அனைவரும் கோவில் திருவிழாவிற்கு சென்றிருந்த சமயம் தனிமையில் இருந்த நிலையில் இம்மாணவி அகாலமரணத்தை தழுவியுள்ளார்.
பல்கலைக்கழகம் சென்று திரும்பியிருந்த சசோதரியே வீட்டிற்கு வந்திருந்தபோது சகோதரி மரணைத்தை தழுவியது தெரியவந்துள்ளது. இம்மாணவியின் சகோதரன் கொழும்பு சட்டக்கல்லூரி மாணவனாவார்.
2 ஆம் பதிப்பு
இவர் அருட்பிகாசம், றஞ்சிதமலர் தம்பதிகளின் மகளும், சிந்துஜா (பல்கலைக்கழக மாணவி) நிரோஜன் (கொழும்பு சட்டக்கல்லூரி மாணவன்) ஆகியோரின் சகோதரியுமாவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் (04.04.2017 ) நாளை அவரது இல்லத்தில் இடம்பெற்று தகனக்கிரியைக்காக நண்பகல் 1 மணியளவில் தாளையம்காடு இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.