வேலணை மேற்கு நடராஜா வித்யாலயம்
மக்கள் பலர் மீள குடியேறாத நிலையில் இப்பிரதேசத்தின் கல்வி முன்னேற்றங்கள் இன்னமும் எதிர்பார்த்த அளவிற்கு ஏற்படவில்லை. ஆசிரியர் பற்றாக்குறை, போக்குவரத்து பிரச்சினை போன்ற பல பிரச்சினைகள் இருப்பதால் எதிர்பார்த்த விளைவுகளை ஏற்படுத்த வில்லை. இப்பிரதேசத்தில் உள்ள மக்களும் கல்வியில் பெரிய ஆர்வத்தை காட்டி வரவில்லை. தீவகப் பகுதியில் பல பாடசாலைகள் மீளகுடியமர்வின் பின்னர் மீள திறக்கப்பட்ட போதும் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தில் திருப்தி அளிப்பதாக இல்லை. இடம் பெயர்விற்கு முன்னர் பல மாணவர்கள் கல்வி கற்ற பாடசாலைகள் இன்று மிகக் குறைந்த மாணவர்களுடன் இயங்குகின்றன. பலர் இன்னமும் வேலணையில் மீளக்குடியேறவில்லை.
நடராஜா வித்தியாலயம் முதன்மை பெறுவதற்கு பலர் அர்ப்பணிப்புடன் பணியாற்றியிருக்கிறார்கள். தற்போதுள்ள அதிபர் திரு. இ. ஞானசோதியன் அவர்கள் நீண்ட காலம் ஆசிரியராக இங்கு கடமையாற்றியவர். அவருடைய துணைவியார் திருமதி. ஞானசோதியன் அவர்களும் நீண்ட காலம் ஆசிரியராகக் கடமையாற்றி வருகின்றார். தீவக கல்வி வலயத்தின் மிகச் சிறந்த ஒரு சமூகக்கல்வி ஆசிரியராகக் கடமையாற்றி வருகிறார். இங்கு நீண்ட காலமாகக் கடமையாற்றி அணி மையில் அமரரான திரு. வ. தியாகராசா ஆசிரியர் இங்கு அர்ப்பணிப்புடன் கடமையாற்றினார். சமூகத்தில் நன்மதிப்பு பெற்றிருந்த ஆசிரியர்களில் இவரும் குறிப்பிடத்தக்கவர்.