வேலணை மேற்கு நடராஜா வித்யாலயம்
இப்பாடசாலை புளியங்கூடல் வேலணை ஆகிய இரண்டு கிராமங் களினதும் எல்லையில் அமைந்திருப்பதனால் இவ்விரண்டு கிராம மாணவர்கள் ஆரம்ப காலங்களில் இருந்து கல்வி கற்று வந்தனர். கிராமங்களின் உறவுப்பாலமாக இது விளங்குகிறது. சைவப்பண்பாட்டுடன் சார்ந்த உயர் விழுமியங்களை மாணவர் மத்தியில் இது வளர்த்து வந்தது. சமயபாட விசேட வகுப்புகள், புராணபடனம், குருபூசை, சமயதீட்சை ஆகிய சமய நெறியோடு சேர்ந்த பல செயற்பாடுகள் இந்த பாடசாலையில் நீண்டகாலமாக செயற்பட்டு வந்தன.
அரசாங்கம் பாடசாலையைப் பொறுப் பேற்ற பின்னர் அத்தகைய செயற்பாடுகள் – அருகி வரத் தொடங்கின. இதனால் இப்பாடசாலையின் பாரம்பரிய பண்பாட்டு நெறிமுறைகள் கைவிடப்படலாயின. எவ்வாறிருந்த போதும் இப்பாடசாலை ஆரம்பிக் கப்பட்டதன் ஆரம்பகால இலக்குகள் தொடர்ந்தும் பேணப்பட வேண்டும்.
இப் பாடசாலையில் ஆரம்பக் கல்வியைப் பெற்ற பலர் உயர்நிலை பெற்றார்கள். யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் கலைப்பீடாதிபதியாக விளங்கிய பேராசிரியர் செ. பாலச்சந்திரன் தனது ஆரம்பக் கல்வியை இப்பாடசாலையில் பெற்றார். வேலணைப் பிரதேச செயலாளராக பதவி வகித்த திரு. செ. இரத்தினம் இப் பாடசாலையில் ஆரம்பக் கல்வியைப் பெற்றவர். ஆரம்ப காலங்களில் வேலணை மத் திய கல் லுTரிக்கு தரம் 6க் கு மாணவர்களை அனுப்பும் பாடசாலைகளில்
ஒன்றாக இந்த வித்தியாலயம் விளங்கியது.
காலப்போக்கில் பழைய கட்டடங்கள் அழிக்கப்பட்டு புதிய கட்டடங்கள் தோற்றம் பெற்றுள்ளன. இந்த வித்தியாலயத்தின் மேற்குப் பக்கத் தில் நின்ற மிகப் பிரமாண்டமான “மாமரம்” இன்றும் பலரது மனதில் பல நினைவுகளை ஏற்படுத்தும். இது காலப்போக்கில் வீதி விஸ்தரிப்பு, மின்கம்பங்கள் காரணமாக தறித்து அகற்றப்பட்டது. இந்த வித்தியாலயத்தின் வடக்கு எல்லையில் உள்ள இல் லத்தில் தங்கியிருந்து கல்விப்பணியாற்றிய பண்டிதை வேதநாயகி அவர்களின் பணி போற்றுதற்கு உரியது. மதுரைத் தமிழ்ப் பண்டிதை பட்டம் பெற்ற வேதநாயகி அவர்களை எல்லோரும் “வேதம்மா” என்று அணி பாக அழைப்பார்கள். இவரிடம் கற்ற பலர் தமிழை அழுத்தம் திருத்தமாக இலக்கண முறைப்படி கற்றார்கள். அதனுடன் சைவ ஆசாரமுறைப் படி மாணவர் வளர நடவடிக்கை எடுத்தார். இவரிடம் கல்வி கற்க பிற ஊர்களில் இருந்தும் மாணவர்கள் வந்து சென்றனர். இவர் தம்பு உபாத் தியாயரின் மகளாவார். இவர் குடியிருந்த குடியிருப்பு நிலம் இப்போது வித்தியாலயத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
சு. ஏரம்பு அவர்களும் இவ் வித்தியால பத்தில் நீண்ட காலம் கல்விப்பணி ஆற்றியவர். அத்துடன் இவர் சிறந்த விவசாயி ஆகவும், சோதிடராகவும் விளங்கினார். மேலும் நில அளவை செய்பவராகவும் செயற்பட்டார். இவரிடம் கற்ற பல மாணவர்கள் இன்றும் இவரது திறமைகளைப் புகழ்ந்து கூறுவார்கள். இவர் கணிதம் கற்பிப்பதில் சிறந்து விளங்கினார்.