சபரிமலை ஐயப்பன் விரதம் இன்று ஆரம்பம்.
வருடாந்தம் நடைபெற்றுவரும் சபரிமலை ஐயப்பன் விரதம் இன்று ஆரம்பமாகவுள்ளது. தீவக பகுதிகளில் உள்ள அனைத்து ஐயப்பன் ஆலயங்களிலும் இன்று இவ்விரதம் சிறப்பாக ஆரம்பமாகவுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் மண்டல, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு, கார்த்திகை மாதம் 1 ஆம் திகதி நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதனையொட்டி ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை முதல் நாளில் இருந்து விரதம் தொடங்கி, இருமுடி கட்டி ஐயப்பனை தரிசனம் செய்யச் செல்வார்கள். நடப்பு மண்டல, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி மண்டல பூஜையும், ஜனவரி 14 ஆம் திகதி மகர விளக்கு பூஜையும் நடைபெறும்.