வேலணை பிரதேச மருத்துவமனையின் அபிவிருத்திப்பணிக்கு வேலணை மக்கள் ஒன்றியம் உதவி வழங்கியது
வேலணை மக்கள் ஒன்றியத்தினால் வேலணை பிரதேச மருத்துவமனையின் அபிவிருத்திப்பணிக்கு ரூபா 75,000 பணம் இன்று February 15, 2017 வழங்கப்பட்டது.
இவ் அபிவிருத்தி பணியானது பிரதான வாயிலில் இருந்து புதிய வெளிநோயாளர் பிரிவுக் கட்டடம் வரைக்குமான பாதையை செப்பனிடுதல் ஆகும்
இது வேலணை மக்கள் ஒன்றியத்தினரால் வேலணை பிரதேச மருத்துவமணையின் உதவி மருத்துவரிடம் வழங்கப்பட்டது.
இன்நிகழ்வில் வேலணை மக்கள் ஒன்றியத்தின் நிர்வாக உறுப்பினர்களும் மருத்துவ மனையின் பணியாளர்களும் கலந்து கொண்டனர் .
மருத்துவ மனையின் நோயாளர் நலம்புரி சங்கத்தினரால் இப்பணி விரைவாக செய்யப்படுகின்றது. பாதை செப்பனிடும் பணி முக்கால்வாசி பணி நிறைவடைந்துள்ளது.
மிகுதிப்பணி துரிதமாக நடைபெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.