வெள்ளப்பெருக்கு காரணமாக வீடுகளைவிட்டு இடம்பெயர்ந்த சுமார் 70 குடும்பங்களுக்கு உலர்உணவுப்பொருட்கள் நுளம்புவலை மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கியுள்ளனர்
கிளிநொச்சி முல்லைத்தீவு உள்ளிட்ட வன்னி பெருநிலப்பரப்பில் இயற்கையின்சீற்றத்தினால் ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கு காரணமாக வன்னியில் வாழ்ந்துவரும் எமது அன்புறவுகள் வீடுகளைவிட்டு இடம்பெயர்ந்து பாடசாலைகளில் ஏதிலிகளாக வாழ்ந்துவருகின்றனர் நீண்டகாலமாக நடந்த யுத்தத்தினால் ஏற்பட்டிருந்த பாதிப்புக்களிருந்து மீண்டெழ முயற்சித்துவரும் வேளையில் மீண்டும் பேரிடியாக இவ்வியற்கைப் பேரிடர் அமைந்துள்ளது இதனைக்கருத்திற்கொண்டு எமது வேலணை மக்கள் ஒன்றியம் இன்று எம்மக்கள் துயர்துடைக்கும் முகமாக கிளிநொச்சி பன்னங்கண்டி அ.த.க பாடசாலையில் தங்கியிருந்த சுமார் 70 குடும்பங்களுக்கு உலர்உணவுப்பொருட்கள் நுளம்புவலை மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கியுள்ளனர் வேலணை மக்கள் ஒன்றியத்தின் தலைவர் திரு ம அரசரத்தினம் மற்றும் உறுப்பினர்கள் நேரடியாக அங்குசென்று பொருட்களை வழங்கினார்கள் மேலும் பல்வேறு மனிதநேய அமைப்புக்களால் ஏனைய பகுதிமக்களுக்கும் நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன நெருக்கடி நிலையின்போது வழங்கப்படுகின்ற இவ்வுதவிகளினால் தங்களை காப்பாற்ற உறவுகள் உள்ளனர் என தாம் உளமகிழ்ச்சியடைவதாக அம்மக்கள் தெரிவித்தனர்