தரம் 5 மாணவர்களுக்கான விசேட கற்றல் செயற்பாட்டுக்கான பயிற்சிப்பட்டறைத் திட்டம்
வேலணை மக்கள் ஒன்றியத்தின் ஆதரவில் வேலணையில் தரம் 5 மாணவர்களுக்கான விசேட கற்றல் செயற்பாட்டுக்கான பயிற்சிப்பட்டறைத் திட்டம் தீவகம்வலயக்கல்விப் பணிப்பாளரின் வேண்டுகோளுக்கமைவாக வேலணைப் பிரதேசத்திலுள்ள பாடசாலைகளின் தரம் 5 மாணவர்களின் கல்விச் செயற்பாட்டை ஊக்குவிக்கும் முகமாக தீவக கல்வித்திணைக்களத்தின் ஆரம்ப பிரிவினரின் ஆலோசனைக்கமைவாகவும் வழிகாட்டலுக்கமைவாகவும் கிழமையில் மூன்று தினங்களுக்கு பி.பகல்.2.00 தொடக்கம் மாலை 5.00 மணிவரைக்கும் தரம் 5 ஆசிரியர் குழுவினால் விசேட கற்றல் செயற்பாட்டு பயிற்சிப் பட்டறை நடைபெறுகின்றது.
இப்பயிற்சி பட்டறையில்
1) யாழ்/ மண்கும்பான் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை
2) யாழ்/வேலணை செட்டிபுலம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை
3) யாழ்/வேலணை கிழக்கு மகா வித்தியாலயம்
4) யாழ்/சரஸ்வதி வித்தியாலயம்
5) யாழ்/சைவப்பிரகாசா வித்தியாசாலை
6) யாழ்/வேலணை மேற்கு நடராசா வித்தியாசாலை
7) யாழ்/வேலணை சரவணை நாகேஸ்வரி மகாவித்தியாலயம்
ஆகிய ஏழு பாடசாலையை சேர்ந்த 90 மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெறுகின்றனர். இம் மாணவர்களின் கற்றல் செயல்ப்பாட்டுக்கான நிதி அனுசரனையை வேலணை மக்கள் ஒன்றியம் வழங்குவதற்கான சம்மதத்தை தெரிவித்து தீவக கல்வி வலயத்தினரிடம் முதலாம் கட்ட நிதியினை வழங்கியுள்ளோம். ஒருநாள் வகுப்புக்கான உத்தேச செலவீனமாக 3200/=ரூபாயெனக் கணிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப் படுகின்றது. சுமார் 30 நாட்களுக்கு இப்பயிற்சிப் பட்டறை நடைபெறுமென இதற்கு பொறுப்பாகவுள்ள தீவக வலயக் கல்வித் திணைக்களத்தை சேர்ந்தவர்களான திரு செல்வக்குமார் அவர்களும் மற்றும் திருமதி சு.அரசரெத்தினம் அவர்களும் தெரிவித்தனர்.
இவ் விசேட கற்றல் பயிற்சிப் பட்டறையானது தற்போது வேலணை சரஸ்வதி வித்தியாலயத்திலேயே நடைபெற்று வருகின்றதுடன் இம் மாணவர்களை இரண்டாகப் பிரித்தே கற்றல் செயற்பாடு நடைபெற்று வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி
நிர்வாக குழுவினர்
வேலணை மக்கள் ஒன்றியம்