வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 11 குடும்பங்களுக்கு உலர்உணவு நிவாரணம் வழங்கப்பட்டது
வேலணை மக்கள் ஒன்றியத்தினால் வேலணை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட J/16 கிராம அலுவலர் பிரிவில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 11 குடும்பங்களுக்கு உலர்உணவு நிவாரணம் வழங்கப்பட்டது இந்நிகழ்வு கிராம அலுவலர் பணிமனையில் நடைபெற்றது
வேலணை மக்கள் ஒன்றியத்தினால் வேலணை கிழக்கு இரண்டாம் வட்டாரத்தை சேர்ந்த அமரர்களான கார்த்திகேசு வள்ளியம்மை தம்பதிகளின் மருமகன் கொக்குவில் கிழக்கைச்சேர்ந்த அமரர் விநாசித்தம்பி யோகராசா அவர்களின் ஒன்பதாம் ஆண்டு ஞாபகார்த்தமாக அவரது குடும்பத்தினரின் நிதியனுசரனையுடன் வேலணை J/16 கிராம அலுவலர் பிரிவிலுள்ள 10 மாற்றாற்றலுடையோர் குடும்பத்தினருக்கு கடந்த 19.11.2024 செவ்வாய்க்கிழமை உலர்உணவு நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டன.இந்நிகழ்வில் J/16 கிராம அலுவலர் மற்றும் வேலணை மக்கள் ஒன்றிய பிரதிநிதிகள் பயனாளிகள் கலந்துகொண்டனர்.