2019ம் ஆண்டு மனைப்பொருளியல் டிப்ளோமா பாடநெறியினை மேற்கொண்ட மாணவிகளின் கண்காட்சி
வட மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் அனுசரணையுடன் வேலணை பிரதேச செயலக பிரிவில் இயங்கும் மகளிர் அபிவிருத்தி நிலையத்தில் 2019ம் ஆண்டு மனைப்பொருளியல் டிப்ளோமா பாடநெறியினை மேற்கொண்ட மாணவிகளின் கண்காட்சி நாளை 2020.02.07ம் திகதி காலை 10.00 மணிக்கு வேலணை பிரதேச செலயகத்தின் செயலாளர் திரு அ.சோதிநாதன் அவர்களின் தலைமையில் வேலணை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இக் கண்காட்சிக்கு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர்
இன்று மனைப்பொருளியல் டிப்ளோமா பாடநெறி மாணவிகளின் கண்காட்சி 07.02.2020 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் வேலணை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் திரு அ.சோதிநாதன் அவர்கள் தலைமையில் மங்கலவிளக்கேற்றலுடன் நடைப்பெற்றது. இக்கண்காட்சியை வைபவரீதியாக பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த மேலதிக அரசாங்க அதிபர் ( காணி) யாழ்மாவட்டம் திரு சு.முரளிதரன் அவர்களினால் நாடா வெட்டி திறந்து வைக்கப்பட்டது. சிறப்பு விருந்தினராக திருமதி நளாயினி இன்பராஜ் ( பணிப்பாளர் கிராம அபிவிருத்தி திணைக்களம் வ.மா ) கௌரவ விருந்தினர்கள் திரு நா.பஞ்சலிங்கம் ( மாவட்ட கிராம உத்தியோகத்தர் யாழ் ) திரு மங்களேஸ்வரன் அரசரட்ணம் ( தலைவர் வேலணை மக்கள் ஒன்றியம் ) திரு சின்னத்தம்பி நரேஷ் (முகாமைத்துவக்குழு பணிப்பாளர் Meesha_London ) அவர்களும் கலந்து சிறப்பித்தனர். நன்றியுரையை திருமதி K பிரியதர்சினி அவர்கள் ஆற்றினார். ( நிதி அனுசரணை வேலணை மக்கள் ஒன்றியம் )