தீவகக் கல்விக் கோட்டத்தின் தற்காலக் கல்விநிலை
5.4.2 வர்த்தகத்துறையில் மாணவர் பெறுபேறுகள்
கடந்த இருவருடங்களில் தீவகக் கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளில் இருந்து வர்த்தகக்துறையில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர் விபரம் கீழுள்ள அட்டவணை … இல் காட்டப்பட்டள்ளது.
அட்டவணை 11 : வர்த்தகத்துறை மாணவர் பெறுபேறுகள்
பாடசாலை | 2014 | 2015 | ||
தோற்றியோர் | பல்கலைக்கழக தகுதி பெற்றோர் |
தோற்றியோர் | பல்கலைக்கழக தகுதி பெற்றோர் |
|
ஊ. புனித அந்தோணியார் | 4 | 3 | 3 | 1 |
நயினாதீவு ம.வி | – | – | 7 | 2 |
புங்குடுதீவு ம.வி | 1 | 0 | 5 | 0 |
வேலணை ம.க. | 3 | 3 | 8 | 5 |
காரைநகர் இந்துக் கல்லூரி | 3 | 3 | 9 | 5 |
காரைநகர் யுரழ்ரன் | 5 | 3 | 3 | 2 |
மொத்தம் | 16 | 12 | 35 | 15 |
(மூலம்: வடக்கு மாகாண கல்வித் திணைக்கள இணையத்தளம் 2016)
தீவகத்திலிருந்து மிகக் குறைவானோரே வர்த்தகத்துறையில் கல்வி கற்கின்றனர். இலங்கையில் உள்ள பிரபல வர்த்தக நிறுவனங்கள் தீவகத்தைச் சேர்ந்தவர்களாலேயே நடத்ப்படுவது அவதானிக்கத்தக்கது. எதிர்காலங்களில் இப்பகுதி மாணவர்கள் வர்த்தகத்துறையை தெரிவு கற்பதை ஊக்கப்படத்தவதானது.
5.4.3 உயிரியல் விஞ்ஞானம்
தீவகத்தில் விஞ்ஞானத்துறையில் உயர் தரம் பயில்வோரின் எண்ணிக்கை மிகக் குறைவென முன்னர் பார்த்தோம். இங்கு உயிரியல் விஞ்ஞானமானது தீவகத்தில் ஊர்காவற்றுறை புனித அந்தோணியார் கல்லூரி, வேலணை மத்திய கல்லூரி, காரைநகர் யாழ்ரன் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் நடத்தப்படுகின்றது. 2014, 2015 ஆகிய ஆண்டுகளில் ஊர்காவற்றுறை புனித அந்தோணியார் கல்லூரியில் இருந்து தலா ஒருவர் வீதம் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர். அவர்களுள் 2014 ஆம் ஆண்டு தோற்றியவர் மட்டும் சித்தியடைந்தள்ளார்.
வேலணை மத்திய கல்லூரியில இருந்து 2014 ஆம் ஆண்டு நால்வரும் 2015 ஆம் அண்டு மூவரும் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றினர். இவர்களுள் 2014 ஆம் ஆண்டு தோற்றிய அனைவரும் பல்கலைக் கழகத்திற்கு தெரிவு செய்வதற்கு தகுதி பெறவில்லை. ஆனால் 2015 ஆண்டு பரீட்சைக்குத் தோற்றிய மூவரில் ஒருவர் இதற்குத் தகுதி பெற்றுள்ளார்.
காரைநகர் இந்துக் கல்லூரியில் இருந்து 2014 ஆம் ஆண்டு உயிரியல் விஞ்ஞானத்துறையில் ஒருவரும் பரீட்சைக்குத் தோற்றாத அதேவேளையில் 2015 ஆம் ஆண்டில் இப்பாடசாலையில் இருந்து இருவர் தோற்றி அவர்களுள் ஒருவர் பல்கலைக்கழகத் தெரிவுக்குத் தகைமை பெற்றுள்ளார்.