தீவகக் கல்விக் கோட்டத்தின் தற்காலக் கல்விநிலை
2015 ஆண்டிலும் இக்கோட்ங்களின் பெறுபேறுகள் திருப்த்திகரமாக அமையவில்லையென்பதை மேலுள்ள அட்டவணை 3 காட்டுகின்றது. இந்த ஆண்டிலும் நெடுந்தீவுக் கல்விக் கோட்டமே மிகக் குறைவான பெறுபேற்றை வெளிக் காட்டியுள்ளமை இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது.
2014, 2015 ஆகிய ஆண்டுகளில் தீவக கல்வி வலயத்திலிருந்து க.பொ.த. (சா. த) பரீட்சைக்குத் தோற்றியோரில் உயர்தரத்தில் விஞ்ஞானப் பாடங்களைத் கற்பதற்குத் தகுதியானோர் விபரம் கோட்ட ரீதியாக கீழுள்ள அட்டவணை 4 இல் காட்டப்பட்டுள்ளது
அட்டவணை 6 உயர்தரத்தில் விஞ்ஞான கணித பாடங்கள் கற்கத் தகுதியானோர்
ஆண்டு | விபரம் | நெடுந்தீவு | ஊர்காவற்றுறை | வேலணை | காரைநகர் |
2014 | தோற்றியோர் | 56 | 150 | 364 | 100 |
தகுதிபெற்றோர் எண்ணிக்கை | 14 | 56 | 80 | 45 | |
தகுதிபெற்றோர் சதவீதம் | 25 | 37.3 | 30.3 | 45 | |
2015 | தோற்றியோர் | 52 | 172 | 337 | 151 |
தகுதிபெற்றோர் எண்ணிக்கை | 14 | 64 | 100 | 64 | |
தகுதிபெற்றோர் சதவீதம் | 26.9 | 37.2 | 29.7 | 42.4 |
(மூலம்: வடக்கு மாகாண கல்வித் திணைக்கள இணையத்தளம் 2016)
தீவக கல்வி வலயத்தினுள் உள்ள கோட்டங்களுள் ஒப்பீட்டு ரீதியில் காரைநகர்க்கோட்டமானது உயர்வான பெறுபெற்றைக் காட்ட நெடுந்தீவுக் கோட்டமானது தாழ்நிலையில் உள்ளது.
மொத்தத்தில் எடுத்து நோக்குகின்ற போது நெடுந்தீவுக் கல்விக் கோடடத்தில் தற்போது இயங்குகின்ற எட்டுப் பாடசாலைகளில் 1ஊ. பாடசாலைகளான நெடுந்தீவு மகா வித்தியாலயம், நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம், நெடுந்தீவு றோமன் கத்தோலிக்க கல்லூரி ஆகியவற்றிலேயே க.பொ.த. (சா.த.) வகுப்புக்கள் காணப்படுகின்றன. இம்மூன்று பாடசாலைகளிலும் இருந்து மொத்தமாக 2014, 2015 ஆகிய ஆண்டுகளில் முறையே 56, 52 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர். இவர்களில்; சுமார் 25 சதவீதமானோரே ஒவ்வொரு ஆண்டிலும் உயர்தரம் கற்பதற்குத் தகுதி பெற்றுள்ளனர். அதாவது தோற்றிய ஒவ்வொரு நான்கு மாணவரில் ஒருவர் மட்டுமே உயர் தரம் கற்பதற்குக் தகுதி பெற்றுள்ளார். மேலும் இக்கல்விக் கோட்டத்திலிருந்து பரீட்சைக்குத் தோற்றியோரின் எண்ணிக்கை 2014 ஆம் ஆண்டில் மூன்று ஆகவும் 2015 ஆம் ஆண்டில் ஏழு ஆகவும் காணப்படுகின்றது. இப்பெறுமானங்களை இப்பிரதேசத்தில் இருந்து இப்பரீட்சைக்குத் தோற்றியோரின் எண்ணிக்கையின் சதவீதமாக நோக்கும்போது இவை முறையே 5.4 ஆகவும் 13.5 ஆகவும் அமைகின்றன. இத்தகவல்கள் நெடுந்தீவுக் கல்விக் கோட்டத்தின் தற்போதுள்ள மிகக் குறைவான கல்வி நிலையை தெளிவாகக் காட்டுகின்றன.
ஊர்காவற்றுறை கல்விக் கோட்டத்தில் ஒன்பது பாடசாலைகளில் க.பொ.த. (சா.த.) வகுப்புக்கள் காணப்படுகின்றன. இப்பாடசாலைகளில் இருந்து 2014, 2015 ஆகிய ஆண்டுகளில் சாதாரணப் பரீட்சைக்குத் தோற்றியோரில் இவ்விரு ஆண்டுகளிலும் ஏழத்தாள 37 சதவீதமானோரே உயர்தரம் கற்பதற்குத் தகுதியைப் பெற்றுள்ளனர். இவர்களில் 2014 ஆம் அண்டில் 12 சதவீதமானோரும் 2015 ஆம் ஆண்டில் 23.8 சதவீதமானோரும் உயர்தரத்தில் கணித விஞ்ஞான பாடங்களைக் கற்பதற்குத் தகுதி பெற்றுள்ளனர். இங்கு 2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது அதற்கு அடுத்த ஆண்டில் கணித விஞ்ஞானம் கற்பதற்குத் தகுதிபெற்றோரின் சதவீதமானது ஏறத்தாள இருமடங்காக அதிகரித்துள்ளமை இங்கு அவதானிக்கத்தக்கது. மொத்தத்தில் எடுத்து நோக்கும்போது ஊர்காவற்றுறைக் கல்விக் கோட்டத்தின் தற்போதைய கல்வி நிலை கவலையளிக்கும் விதத்தில் அமைவதை இப்பெறுபேறுகள் தெளிவாக்குகின்றன.