கலாசாரப் பெருவிழா – 2018.
வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் வேலணைப் பிரதேச கலாசாரப் பேரவையும், பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் கலாசாரப் பேரவை – 2018 எதிர்வரும் 11.09.2018 செவ்வாய்க்கிழமை, பிற்பகல் 4 மணிக்கு நயினாதீவு மேகலை கலையரங்கில் நடைபெறவுள்ளது.
வேலணை பிரதேச செயலர் திரு அ.சோதிநாதன் அவர்கள் தலைமையில் நடைபெறும் மேற்படி நிகழ்விற்கு பிரதம விருந்தினராக யாழ்.பல்கலைக்கழக இந்துநாகரிகத்துறை பேராசிரியர் திரு மா.வேதநாதன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண கல்விஅமைச்சின் பிரதம கணக்காளர் திரு இ.சிவரூபன் அவர்களும், வேலணை பிரதேச சபை தவிசாளர் திரு ந.கருணாகரமூர்த்தி அவர்களும், கௌரவ விருந்தினர்களாக மாவட்ட கலாசார உத்தியோகத்தர் திரு மா.அருள்ச்சந்திரன் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அழைக்கினறனர் வேலணை கலாசாரப்பேரவையும் பிரதேச செயலகமும்.