வேலணை வடக்கு ஆத்திசூடி வித்தியாசாலை
திரு. கு. வி. செல்லத்துரையைத் தொடர்ந்து திரு. ஐ. பொன்னையா,பண்டிதர் அ. பொன்னுத்துரை, வித்துவான் இ. பொன்னையா, பண்டிதர் குமரேசையா, திரு. சி. இராசரத்தினம், திரு. கந்தையா, திரு. தி. சிவசாமி, திருமதி. இராசம்மா தேவராசா ஆகியோர் 1990 வரை அதிபர்களாக கடமையாற்றியுள்ளனர். திரு. ஐ. பொன்னையா அதிபராக கடமை யாற்றிய காலத்தில் பாடசாலைக்கு கிணறு, மலசலகூடம், பாலர் வகுப்புகளுக்கு தனியான கட்டடம் ஆகிய வளங்கள் அதிகரிக்கப்பட்டன. குறுகிய காலத்தில் பல சிறந்த அதிபர்களின் சேவையை இப்பாடசாலை பெற்றுக் கொண்டமை ஒரு சிறப்பு அம்சமாகும்.
இப்பாடசாலையின் வளர்ச்சிக்காக உழைத்த ஆசிரியர் பெருமக்களில் மேற்குறிப்பிட்டோருடன் திரு. சுப்பிரமணியம், திருமதி. கமலாதேவி பூபாலசிங்கம், திருமதி பூமணி, திருமதி. செளந்தரம் விநாயகமூர்த்தி, திரு.இ.நாகராசா, திரு.வி.கனகரத்தினம், செல்வி செளந்தரநாயகி சோமசுந்தரம், செல்வி.யோகேஸ்வரி ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள்.
1952 தொடக்கம் 1990 வரை நல்ல முறையில் இயங்கி பல சிறந்த மாணவர்களை உருவாக்கிய இப் பாடசாலை 1990 இல் இடம்பெற்ற பாரிய மக்கள் இடப் பெயர்வு காரணமாக தற்காலிகமாக மூடப்படவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது. தற்போது இப்பாடசாலைக்கு திருமதி.இந்திராணி சிவதாசனி அதிபராக நியமிக்கப்பட்டு மீண்டும் பாடசாலை சரஸ்வதி வித்தியாலயத்தில் ஒரு பிரிவாக இயங்கி வருகின்றது. வேலணை வடக்கில் மீள்குடியேற்றம் முழுமை பெற்றதும் இப் பாடசாலை பழைய இடத்திற்கு செல்லுமென எதிர்பார்க்கலாம்.
இப்பாடசாலையின் பழைய மாணவர்கள்,உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும், டாக்டர்களாக, பொறியியலாளர்களாக, சட்டத்தரணிகளாக, கணக்காளர்களாக, நிருவாக சேவை உத்தியோகத்தர்களாக பாடசாலை அதிபர்களாக, தொழில் அதிபர்களாக, வர்த்தகர்களாக, ஆசிரியர்களாக புகழுடன் வாழ்கின்றனர்.
குறிப்பு : தற்போது இப் பாடசாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
நன்றி Noolagam