வேலணை வடக்கு ஆத்திசூடி வித்தியாசாலை
1954 ஆம் ஆண்டில் திரு.ஆறுமுகம் இடமாற்றம் பெற்றுச் செல்ல நவாலியூரைச் சேர்ந்த திரு. அரியரெத்தினம், புங்குடுதீவைச் சேர்ந்த திரு. மயில்வாகனம், இக்கிராமத்தைச் சேர்ந்த திருமதி. சரோஜினி படிகலிங்கம் ஆகியோர் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். திரு.மயில்வாகனம் பயிற்றப்படாத ஆங்கில ஆசிரியர். மிகத் துடிப்பும் சேவை மனப்பான்மையும் மிக்க ஆசிரியர். அவர் ஆங்கிலம், சுகாதாரம் ஆகிய பாடங்களைப் போதித்தார். பண்டிதர் கனகசபாபதி கணிதம், சமயம், தமிழ், வரலாறு, புவியியல் ஆகிய பாடங்களை நான்காம், ஐந்தாம் தர மாணவர்களுக்கு கற்பித்ததுடன் மாணவர்களின் பன்முக ஆளுமை வளர்ச்சியில் இவி விரு ஆசிரியர்களும் காட்டிய அக்கறை அவர்களிடம் கற்ற மாணவர்களால் மறக்க முடியாதவை.
சமயவிழாக்கள், மாணவர் மன்றம், நிழற் பாராளுமன்றம் ஆகிய இணைப்பாடவிதான செயற்பாடுகளில் மாணவர்களை ஈடுபடுத்திப் பயிற்று வித்ததோடு பாடசாலைகளுக்கிடையிலான போட்டிகளிலும் மாணவர்களைப் பயிற்றுவித்துப் பங்குபெறச் செய்து மாணவர்களின் திறமைகளை வெளிக் கொண்டுவரவும், தன்னம்பிக்கையை வளர்க்கவும் அவர்கள் ஆற்றிய பணி அளப்பரியது. ஊர்காவற்றுறைப் பாடசாலைப் பரிசோதகர் பிரிவில் ஆத்திசூடி வித்தியாசாலையின் பெயரைத் துலங்க வைத்த பெருமை அவர்களையே சாரும்.
1954 ஆம் ஆண்டு நண்டபெற்ற ஐந்தாம் தர N. P. T. A பரீட்சை, புலமைப்பரிசில் பரீட்சை, கொழும்பு விவேகானந்த சபையால் நடாத்தப்பட்ட சைவசமய பாடப்பரீட்சை ஆகியவற்றில் இப்பாடசாலை மாணவர்கள் மிகச்சிறந்த பெறுபேறுகளைப் பெற்றனர். 1955 ஆம் ஆண்டு திரு. தில்லையம்பலம், பண்டிதர் கனகசபாபதி ஆகியோர் இடமாற்றம் பெற்றும் திரு. மயில்வாகனம் உயர்கல்வி கற்க இந்தியாவிற்கும் சென்றுவிட புங்குடுதீவைச் சேர்ந்த திரு. கு. வி. செல்லத்துரை அதிபராகவும், பள்ளம்புலத்தை சேர்ந்த திரு. ச. மகாலிங்கம் ஆசிரியராகவும் நியமிக்கப்பட்டனர்.
திரு.கு.வி.செல்லத்துரை ஆளுமையும் அனுபவமும் மிக்க அதிபர். திரு.ச.மகாலிங்கம் திறமையும் சேவை மனப்பான்மையும் கொண்ட இளம் ஆசிரியர். இவர்களின் விசுவாசமான சேவையினால் பாடசாலைத் தரம் தொடர்ந்தும் பேணப்பட்டு வந்ததோடு திரு.ச.மகாலிங்கம் தனது முழு நேரத்தையும் பாடசாலை வளர்ச்சிக்காகவே அர்ப்பணித்து பணியாற்றி பாடசாலையைச் சீரான வளர்ச்சிப்பாதையில் இட்டுச் சென்றார்; இ.வி வாசிரியரின் திறமை, சேவை மனப்பான்மை, தன்னடக்கம், நன்னடத்தை ஆகியன பெற்றோரை மிகவும் கவர்ந்திருந்தமையால் மாணவர் தொகை அதிகரித்ததோடு பரீட்சைப் பெறுபேறுகள்,பாடசாலைகளுக்கிடையிலான போட்டிகளில் மாணவர் திறன் வெளிப்பாடு ஆகியன உயர்ந்த நிலையில் இருந்தன. திரு. மகாலிங்கம் எட்டு வருடங்களுக்கு மேல் இப்பாடசாலையில் நற்பணியாற்றியுள்ளார். ஆத்திசூடியின் வரலாற்றில் இவரது சேவைக்காலம் சிறப்பாகக் குறிப்பிடப்பட
வேண்டியது.