ஜேம்ஸ் கிண்ணம் – 2016 உதைபந்தாட்ட கிண்ணத்தினை கைப்பற்றியது புங்குடுதீவு நசரத்.
ஊர்காவற்றுறை புனித யாகப்பர் ஆலயத்தினுடைய 300 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஊர்காவற்றுறை சென்.ஜேம்ஸ் சனசமூக நிலையமும் விளையாட்டு கழகமும் இணைந்து நடாத்திய 7 பேர் கொண்ட மாபெரும் உதைபந்தாட்ட சமர் ‘ ஜேம்ஸ் கிண்ணம்-2016 ‘ ற்கான இறுதி போட்டி நேற்று 14.11.2016 மாலை 4.00 நான்கு மணிக்கு ஊர்காவற்றுறை சென்.அன்ரனிஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெறது.
இதில் மெலிஞ்சிமுனை இருதயராஜா விளையாட்டுக்கழகத்தினை எதிர் கொண்டு புங்குடுதீவு நசரேத் விளையாட்டுக்கழகம் மோதியது.
போட்டியில் புங்குடுதீவு நசரத் விளையாட்டுக்கழகம் அபார வெற்றியீட்டி முதலாம் இடத்துக்கான வெற்றி கேடயத்தை தமதாக்கி கொண்டது.