கட்டிடக் காடும் யூரோனிய கதிரும் நூல் வெளியீடு
கட்டிடக் காடும் யூரோனிய கதிரும் நூல் வெளியீடு (photos)
கட்டிடக் காடும் யூரோனிய கதிரும் நூல் வெளியீடு
வேலணையூர் ரஜிந்தனின் கட்டிடக் காடும் யூரோனிய கதிரும் நூல் வெளியீடு நேற்று (11.12.2019) வேலணை தெற்கு ஐயனார் வித்தியாலய மண்டபத்தில் வித்தியாலய பிரதி அதிபர் திருமதி பு.இராசநாயகம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு வேலணை பிரதேச செயலர் திரு அ.சோதிநாதன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார். மேலும் சிறப்பு விருந்தினர்களாக கவிஞர் சோ.பத்மநான் அவர்களும், கவிஞர் வேலணையூர் தாஸ் அவர்களும், கலாச்சார உத்தியோகத்தர் பா.ஜெயதாசன் ஆகியோரும் கௌரவ விருந்தினராக கீர்த்தி ஸ்ரீ தேசபந்து லயன் டாக்டர் க.ஜெயச்சந்திரமூர்த்தி அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
நூல் வெளியீட்டினை கவிஞர் சோ.பத்மநாதன் அவர்களும், பிரதேச செயலர் அ.சோதிநாதன் அவர்களும் வெளியீட்டுவைக்க முதற்பிரதியினை கிருபா லேணர்ஸ் உரிமையாளர் திரு அ.கிருபாகரன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.