அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை
பேராசிரியர் . பொ . பாலசுந்தரம்பிள்ளை – யாழ் பல்கலைக்கழகம்
தீவுப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைகளுள் முன்னோடியாக இக்கல்வி நிறுவனம் விளங்குகின்றது. இந்து சமய ஸ்தாபனங்கள், அரசாங்கம், றோமன் கத்தோலிக்க திருச்சபை மற்றும் சமய தொண்டு நிறுவனங்களின் முயற்சிகளுக்கு முன்னர் அமெரிக்க மிஷனரிமாரால் இப்பாடசாலை 19 ஆம் நூற்றாண்டின் முற் பகுதியில் அமைக் கப்பட்டது. இப் பாடசாலை முன் னர் இயங்கி, கைவிடப்பட்டு மீண்டும் செயற்படத் தொடங்கி இருக்க வேண்டும் என கருத வேண்டியுள்ளது. 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வேலணை வாந்திபேதி நோயினால் பெரிதும் பாதிக்கப்பட்டு இருந்தது. வங்களாவடியை சூழவுள்ள பகுதியில் இறந்தவர்களை புதைத்ததாக இன்னும் வழிவழியாக பேசப்பட்டு வருவதை காணலாம்.
19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து இப்பாடசாலை சிறப்பாக இயங்கத் தொடங்கியது. 1927 இல் சரஸ்வதி வித் தியாசாலை ஆரம்பமாக முதல் வேலணை கிழக்கில் இருந்த ஒரேயொரு ஆரம்ப பாடசாலை இதுவேயாகும். வேலணை மேற்கில் சைவப் பிரகாச வித்தியாசாலை 1879 இல் ஆரம்பிக்கப் பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது. வேலணை கிராமத்துப் பிள்ளைகள் அமெரிக் கன மிஷனி பாடசாலை மூலமாகவே கல்விகற்கலானார்கள்.
இப்பாடசாலை அமெரிக் கண் மிஷன் பாதிரிகளால் ஆரம்பிக்கப்பட்ட பொழுதும், இவர்கள் சமூகத்திற்கு கடும் அழுத்தம் கொடுத்ததாக தெரியவில்லை. கிராமத்தில் ஒருசில குடும்பங்களே காலத்துக்கு காலம் கிறிஸ்தவ சமயத்தில் சேர்ந்திருந்தார்கள். எனவே இப்பாடசாலை சமயங்கடந்து கல்விப்பணியில் தன்னை வளர்த்துக் கொண்டது.
சரஸ்வதி வித்தியாலய ஆரம்பத் துடன் இப்பாடசாலைக்கும், சரஸ்வதி வித்தியாசாலைக்கும் மாணவர்களைச் சேர்ப்பதிலும் பாடவிதானம், பாடநூல்கள் தெரிவு, கற்பிக்கும் முறையில் போட்டி ஆரம்பமாகின – இப்போட்டியால் கிராமத்துப் பிள்ளைகள் பயனடைந்தார்கள் – இருபாடசாலைகளும் ஏட்டிக்குப் போட்டியாக மாணவர்களை சேர்க்கத் தொடங்கின. ஆசிரிய நியமனங்கள் மாணவர் எண்ணிக்கையில் கொடுக்கப் பட்டதால் இரு பாடசாலைகளிலும் ஆசிரியர்கள் எண்ணிக்கையும் அதிகரித்தன. கல்விச் செயற்பாட்டில் அமெரிக்கன் மிஷன் காலத்துக்கு காலம் முன்னிலை வகித்தது. 1930 க்கு முன்னர் இக் கிராமத்து படித்தவர்கள் யாவரும் இப்பாடசாலை மூலமே வெளிவந்தவர்கள். இதன் பின்னரும் இப்பாடசாலையின் பங்கு குறையவில்லை. 1940, 1950 களில் இப் பாடசாலை பல பிரச்சினைகளை எதிர் நோக்க வேண்டி இருந்தது.
வேலணைகிராமத்தின் துறையூரில் பாடசாலை ஆரம்பம், வேலணை கிழக்கு மகா வித்தியாலய ஆரம்பம், செட்டிபுலம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ஆரம்பம், சோழாவத்தை ஆத்திசூடி வித்தியாலய ஆரம்பம் காரணமாக வங்களாவடிக்கு வரும் மாணவர்கள் குறைவடைந்தனர். முன்னர் வேலணை கிராமத்து பாடசாலையாக இருந்த இக் கல்வி நிறுவனம் வங்களாவடியைச் சூழவுள்ள பிள்ளைகள் கல்விகற்கும் நிறுவனமாக மாறியது.
1960 இல் இலங்கை முழுவதும் அரசாங்கம் பாடசாலைகளை பொறுப்பேற்றதால் இப்பாடசாலை அரசினர் பாடசாலையாக மாறியது. அமெரிக்க மிஷனின் கட்டுப்பாடு இல்லாது போனது. மேலும் அமெரிக்க மிஷனின் உதவிகள் இல்லாதுபோயின.
கிறிஸ்தவ பிள்ளைகள் இல்லாத நிலையில் வங்களாவடியில் இருந்த இரு பாடசாலைகளையும் சீர் செய்து 1970 இல் சரஸ்வதி வித்தியாசாலையை ஆண்கள் பாடசாலையாகவும், இதனை பெண்கள் பாடசாலையாகவும் மாற்றினர். இப்பாடசாலை 1991 ஆம் ஆணி டு இடப்பெயர்வு வரையும் சிறப்புற நடைபெற்றது. 1991 – 1996 இடப்பெயர்வுக்குட்பட்ட காலத்தில் யாழ்ப்பாணத்தில் இயங்கியது. 1996 க்குப் பின்னர் மக்கள் மீளக் குடியமரத் தொடங்கிய பொழுது சரஸ்வதி பாடசாலை மீளவும் (ஒரே பாடசாலையாக) இயங்கத் தொடங்கி, தற்பொழுது இப்பாடசாலை மீள இயங்குவதற்கு புனருத்தாரண பணிகள் மேற்கொள்ள வேண்டியதாக இருக்கின்றது.
இப்பாடசாலையில் புகழ் பெற்ற பல அதிபர்கள், ஆசிரியர்கள் கடமையாற்றி இருக்கின்றனர். அவர்களுள் முன்னோடி யாக திகழ்பவர் திரு. நா. இளையதம்பி ஆவார். இவரைத் தொடர்ந்து திரு. வி. செல்லத்துரை, திருமதி. க. பொன்னப்பா, திரு. ஈ. டி. இராஜரத்தினம், திரு. இ. நாகராஜா, திருமதி. நடராஜா போன்றோர் கடமையாற்றினர். ஒவ்வொருவரின் காலத்திலும் பாடசாலை வெவ்வேறு துறைகளில் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது.
வேலணையில் முதற்பாடசாலையாக இருந்தும் 1991 இல் இடப்பெயர்வுக்குப் பின் னர் இயங்காமல் இருப்பது இக்கிராமத்து மக்களிடையே மிகுந்த கவலையை கொடுத்து வருகின்றது. தற்பொழுது இடம்பெற்று வரும் புனர்வாழ்வு, புனருத்தாரண பணிகள் மூலம் இப்பாடசாலையை பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்பது கிராமத்தவர்களின் விருப்பம். மக்கள் துரிதமாக மீளக்குடியேறி வருவதாலும், வங்களாவடி புதிய நகராக விருத்தி பெற்று வருவதாலும் முன்னிலும் பார்க்க இப்பாடசாலையின் தேவை கூடுதலாக உணரப்படுகின்றது. மேலும் இதனது இடவமைவு கிராமத்து மக்களின் கல்வித் தேவையை பூர்த்தி செய்யக்கூடியது. இப் பாடசாலையை மீளவும் கட்டி வளர்ப்பதற்கு கல்வியதிகாரிகள், கிராம மக்கள், பழைய மாணவர்கள், சமூகப்பெரியோர் முன்வர வேண்டும்.