வேலணை கிழக்கு மகா வித்தியாலயத்தின் 72 ஆவது பாடசாலைத்தினமும், பரிசளிப்பு விழாவும்.
வேவலணை கிழக்கு மகா வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழாவும், 72 ஆவது ஆண்டு பாடசாலைத்தினமும் 10.06.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு பாடசாலை பொது மண்டபத்தில் பாடசாலை அதிபர் திருமதி ஜெ.சிறிஸ்கந்தராசா அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கல்வி பண்பாட்டு அலுவல்கள் , விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார வடமாகா அமைச்சின் செயலாளர் திரு சி.சத்தியசீலன் அவர்களும், சிறப்பு விருந்தினராக தீவக கல்வி வலய பிரதிக்கல்விப்பணிப்பாளர் ஆ.ஜோகலிங்கம் அவர்களும கௌரவ விருந்தினராக நொதேர் வைத்தியசாலை இயக்குநர் திரு எஸ்.பி.சாமி அவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
மேற்படி நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அழைக்கின்றனர் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்.