கல்விக்கு கை கொடுக்கும் உன்னத பணியில் வேலணை மக்கள் ஒன்றியம்
கல்விக்கு கை கொடுக்கும் உன்னத பணியில் வேலணை மக்கள் ஒன்றியம்.
பாத்திரமறிந்து பொருள் கொடு என்று தமிழில் முதுமொழி ஒன்று உள்ளது.அந்த வகையில் எமது ஊருக்கு மட்டும் என்ற குறுகிய வட்டத்துக்குள் நின்று விடாது உண்மையில் உதவி தேவைப்படும் பிள்ளைகள் தொழில் பயிற்சி கற்க வேலணை மக்கள் ஒன்றியம் உதவியுள்ளார்கள்.
ஆம் யுத்தத்தால் முழுமையாகச் சிதைந்த வன்னியில் இருந்து இலவசங்கள் தேவையில்லை, தொழில் பயிற்சி கற்று கௌரவமான வேலைக்கு சென்று சொந்தக் காலில் நிற்போம் என்ற திட சங்கற்பத்துடன் வந்த பிள்ளைகளில் ஜந்து பேருக்கு தாதிய உதவியாளர் பயிற்சி கற்க வேலணை மக்கள் ஒன்றியம் உதவி செய்துள்ளார்கள்.
செல்வி.கந்தராஜா ரூபிதா ( 12 ம் கட்டை,குமாரசாமிபுரம்,விசுவமடு) , செல்வி.குணசேகரம் சஷ்மிதா ( வைரவர் கோவில் கிழக்கு,பரந்தன்) ,செல்வி.கந்தசாமி குகரூபி( நாகதம்பிரான் கோவிலடி,புளியம்பொக்கனை,கிளிநொச்சி) செல்வி.யோகநாதன் லோஜிகா (16 ம் ஒழுங்கை,முல்லை வீதி, பரந்தன்) ,செல்வி.சுப்ரமணியம் அனிதா( 268,5ம் கட்டை,தர்மபுரம்,கிளிநொச்சி) ஆகிய பிள்ளைகள் தாதிய உதவியாளர் பயிற்சி படிக்க இணைக்கப்பட்டுள்ளார்கள்.இப் பிள்ளைகள் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள்,யுத்தத்தில் தமது உறவுகளைப் பறி கொடுத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வன்னியில் இருந்து ஆர்வத்துடன் வரும் இப் பிள்ளைகள் நிச்சயமாக ஒரு வருட பயிற்சியின் முடிவில் வைத்திய துறையில் நல்ல சம்பளத்துடன் கூடிய கௌரவமான வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றுவார்கள்.
இப் பிள்ளைகள் படிக்க உதவிய வேலணை மக்கள் ஒன்றியத்திற்கு இப் பிள்ளைகளின் குடும்பத்தினர் சார்பில் நன்றிகள்.
பசிக்கிறவனுக்கு மீனைக் கொடுப்பதை விட மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பதே நீண்ட கால நோக்கில் சிறந்தது என்பதே எமது தாரக மந்திரமாகும்.
வன்னியில் இருந்து இன்னும் பல பிள்ளைகள் படிப்பதற்கு உங்கள் உதவிக்காக காத்திருக்கிறார்கள்.
மேலதிக விபரங்களுக்கு
Dr.Y.Yathunanthanan
0094773203137
0094773164617