வெள்ளி விழாக் காணும் வேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் பிரான்ஸ் 1992 – 2017
வேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் பிரான்ஸ் கடந்து வந்த 25 வருட செயற்பாட்டுக் காலப் பகுதியில், எமது கல்லூரிக்கும், எமது மாணவர் சமூகத்திற்கும், நாம் ஆற்றிய சிறப்பான பணிகளை நினைவுகூரவும், எதிர்காலத்திலும் கல்லூரி நோக்கிய செயற்பாடுகளில் வீறுடன் பீடு நடை போடவும், இவற்றுக்காக முன்னின்றுழைத்த, உழைக்கும் எம் உறவுகளை ஒன்றுகூட்டி உறவாடி மகிழவும் எம் உறுப்பினர்களின் பேராதரவுடன் எம் சங்கத்தின் வெள்ளி விழாவினை எதிர்வரும் 01/10/2017 அன்று சிறப்புறக் கொண்டாட விழைகின்றோம். பல்வேறு கலை நிகழ்வுகள், அரங்க நிகழ்வுகளுடனும், சிறப்பு விருந்தினர்கள், கௌரவ விருந்தினர்களுடனும் இவ்விழா விமரிசையாக நடைபெறவுள்ளது என்பதனை மகிழ்வுடன் அறியத் தருகின்றோம்.
விழாவின் புதிய சிறப்பம்சமாக, 10 – 16 வயதெல்லைக்குட்பட்ட சிறார்களுக்கான ஓவியக்கலைப் போட்டி ஒன்றும் அன்றைய தினம் நடைபெறவுள்ளது.
இப்போட்டி நடைபெறும் இடம் : விழா மண்டபம்
காலம் : 01/10/2017 14.00 மணி
போட்டியில் கலந்து கொள்வதற்கான விண்ணப்ப முடிவுத் திகதி: 15/09/2017
இப் போட்டியில் பங்கு கொள்ள விரும்பும் சிறார்கள் தங்கள் பதிவுகளை மேற்கொள்ள வேண்டிய தொடர்பு இலக்கங்கள் :
திரு. ம. சிவகரன் – 0652857945
திரு. அ. தேவதாசன் – 0647067493