வேலணை சைவப்பிரகாச வித்தியாசாலை
(கந்தப்பு உபாத்தியாயர் பள்ளிக்கூடம்)
சைவப்புலவர் – மு. திருஞானசம்பந்தபிள்ளை – அதிபர்
யாழ்ப்பாணக் குடாநாட்டிலே பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஸ்ரீலஸ்ரீ ஆறு முக நாவலர் பெருமான சைவத்தையும் தமிழையும் வீறுபெற்றெழச் செய்தார். சைவமும் தமிழும் தழைத்தோங்க வேண்டுமாயின் சைவத் தமிழ்ப் பிள்ளைகள் தமது சமய, மொழிச் சூழலில் கல்விகற்க வேண்டுமென எண்ணி வண்ணார் பண்ணையில் சைவப்பிரகாச வித்தியாசாலை ஒன்றை நிறுவினார். சைவ நன்மாணாக்கர்கள் சைவச்சூழலில் கற்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அவரின் மாணவ பரம்பரை ஒன்று உருவாகியது. அன்றைய நாளில் குடாநாட்டின் பல பகுதிகளிலும் இருந்து மாணவர் அங்குவந்து கற்றனர். ‘கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக” என்றபடி மாணவர் ரம்பரையினர் தத் தம் ஊர்களிலும் சைவத்தையும் தமிழையும் மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.
வேலணைத் தீவிலே அஞ்ஞான்று நாவலர்தம் நன்மாணாக்கராகப் பெறும் பேறு பெற்றவர் ஸ்ரீமான் வினாசித்தம்பி கந்தப்பிள்ளை அவர்கள். பிள்ளையவர்கள் ஒய்வில் புகழாறு முகநாவலர் மக் கண் பினுரிமை மாணாக் கனாகி இலக்கணமிலக்கிய புராணங்களோதியு ணர்ந்து சிவதீட்சை மூன்றும் பெற்ற ‘லராக விளங்கியவர். நுணி மதியும் சைவசாத்திர ஞானமும் நிர்வாண தீட்சைப் பறும் பெற்ற பிள்ளையவர்கள் வேலணைத் விலும் சைவப்பிரகாச வித்தியாசாலை ஒன்றை நிறுவ உளங்கொண்டார். தம் உள்ளத்தெழுந்த ஆர்வத்தைத் தம் அன்பர்களிடம் கூறி அவர்கள் ஆதரவைப் பெற்று 1879 ஆம் ஆணி டிலே பள்ளம்புலத்துச் சைவாபிமானி கல்வீட்டு நாகமுத்து ஐயம்பிள்ளை அவர்கள் வீட்டுத் திண்ணையிலே வகுப்பினை நன்னாளிலே சமயசார முறைப்படி ஆரம்பித்து வைத்தார்.
அதன் பின் இவ்வாண்டிலே மக்கள் உதவிகொண்டு “வீலிங்கன் கலடு” என்றழைக்கப்பெறும் வித்தியாசாலை வளவில் அஞ்ஞான்று ஊர்காவற்றுறை, நீதிபதியாக விளங்கிய வைமன் கதிரவேற்பிள்ளை அவர்களால் வித்தியாசாலைக் கட்டிடத்திற்கு அத்திவாரமிடப் பட்டது. அவ்வித்தியாசாலைக் கட்டிடம் 1880 ஆம் ஆண்டு நிறைவெய்தியது. “சைவப்பிரகாச வித்தியாசாலை” தோன்றி ஒளிகான்றது. இப்பாடசாலைக்கு “கந்தப்பு வாத்தியார் பாடசாலை” என்றும் பெயர் வழங்கி வந்தது.