வேலணை மேற்கு நடராஜ வித்தியாலயம் மெய்வல்லுநர் திறனாய்வு-2017
யாழ்.வேலணை மேற்கு நடராஜ வித்தியாலயத்தின் இல்லமெய்வல்லுநர் போட்டிகள் பாடசாலையின் அதிபர் செல்வி வாசுகி செல்வரெட்ணம் தலைமையில் வெள்ளிக்கிழமை February 17th 2017 நடைபெற்றது. இந் நிகழ்வுகளில் முதன்மை விருந்தினராக வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் கலந்துகொண்டார்.
சிறப்பு விருந்தினராக தொழிலதிபர் முருகேசபிள்ளை குமரசேகரனும் வேலணை கேட்டக் கல்விப் பணிப்பாளர் பொ.சிவானந்தராஜாவும் கலந்துகொண்டனர்.
கௌரவ விருந்தினர்களாக ஓய்வுநிலை அதிபர்களான திரு திருமதி ஞானசோதியனும் கிராம அலுவலகர்களான எஸ். இரத்தினனேஸ்வரன், ஏ.சாள்ஸ்பஸ்தியன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.