யாழ் தீவுகள் உருவான வரலாறு – பகுதி 01
அதற்கு பின் கி மு 3102 மாசி 17 இல் கலியுகம் ஆரம்பம் என்று வரலாற்றில் வருகின்றது .இதுவே சிந்து வெளி காலத்தில் ஆரம்பம் ஆகவும் கருதப்படுகின்றது .இந்த காலத்தில் தான் துவாரகை புகழ் பெற்று விளங்கிய காலம் .3100 /1900,இதற்கு இடைப்பட்ட காலத்தில் ஒரு கடல் கோள் வந்ததாகவும் ஆனால் இந்த கடல்கோளில் மொஹெஞ்சதாரோ வின் பகுதிகள் ,மெஹெர்கர் பகுதி, ஹரப்பாவின் பகுதிகள் ,லோத்தல் என்ற இடத்தின் பகுதிகளே அனேகமாக அழிந்தது ,இதை தான் சிந்துவெளி கடல்கோள் என்று அழைப்பார்கள் .இந்த அழிவின் பொழுது துவாரகை அழிந்து இருக்கலாம் .இந்த துவாரகையின் தடயங்களை ஆதாரங்களை இந்திய அரசு தற்பொழுது ஆய்வு செய்து உறுதிபடுத்தி உள்ளது .அதை சிலர் தவறாக குமரிக்கண்ட ஆய்வு என்று பரப்புரை செய்கின்றார்கள். இந்த அழிவின் போது மிகப்பெரிய பூமி அதிர்வும் ஏற்பட்டதால் சரஸ்வதி நதி நிலவெடிபுக்குள் அமிழ்ந்துபோனது .ஆனால் இந்த அழிவுகள் மேற்கு இந்திய பகுதிகளையே அதிகம் தாக்கியதாகவும் ,தென்னிந்தியாவையும் ஈழத்தையும் பெரிதாக பாதிக்கவில்லை என்றே ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள் .அதனால் இந்த கடல் அழிவிலும் ஈழத்தில் வடபகுதி தீவுகள் உருவாக சாத்தியம் இல்லை .
இதே சமகாலத்தில் கி மு 2387 இல் தென்னிந்தியாவையும் ஈழத்தையும் உலுப்பிய இன்னொரு கடல் அழிவு ஏற்பட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். இந்த கடல் அழிவின் போது தான் தென்மதுரையும் கபாட புரமும் அழிந்ததாக கூறுகின்றார்கள். கபாட புரத்தையும் ஈழத்தையும் இந்து சமுத்திர நீர் பிரித்ததாகவும் சொல்கின்றார்கள் .இதில் கபாட புரம் முழுமையாக அழிந்ததாக கூறப்படுகின்றது.இங்கு இயங்கிய தமிழ் சங்கத்தில் ஈழத்தவர்களும் பங்கு கொண்டார்கள் என்ற கருத்துக்களும் இருக்கிறது ,அதனால் ஈழத்துக்கும் கபாட புரத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கும் என்று கருதப்படுகின்றது .இந்த கடல் அழிவில் தான் ஈழத்தின் வடபகுதி தீவுகள் யாழில் இருந்து பிரிந்து இருக்குமா என்று சிந்திக்கவே தோன்றுகின்றது .கபாடபுரம் ஈழத்துக்கும் இந்தியாவுக்கும் நடுவில் இருந்து இருக்கலாம்.இது இன்னும் பல்வேறு பட்ட ஆய்வுக்கு உட்படுத்தவேண்டிய விடயமாகவே நான் கருதுகின்றேன் .வரலாற்று மாணவர்கள் புதிய ஆய்வாளர்கள் இதற்கான தகுந்த நிறுவுதலை ஆதாரங்களை முன்வைத்தால் அந்த கருத்தை ஏற்றுகொள்ளலாம் .கபாடபுரத்தில் சங்கம் வளர்த்த புலவர்கள் எழுதிய பாடல்கள் குறிப்புக்களிலும் அவர்களுக்கு பின்வந்த கடை சங்க ஆரம்ப கால புலவர்கள் குறிப்புக்களிலும் ,,யாழ் வடபகுதி தீவுகள் யாழ்பாணதோடு இணைந்த வரலாற்று குறிப்புக்களையே காணக்கூடியதாக இருக்கிறது .
அடுத்த மிக பெரிய கடல் கோளாக கருதப்படுவது கி மு 3ம் நூற்றாண்டு அளவில் தொண்டமான் இளம்திரையன் ஈழ நாட்டில் இருந்து சோழநாட்டுக்கு புறப்பட்டு சென்ற பொழுது ஏற்பட்டதாக கருதப்படுகின்றது .இந்த கடல் அழிவு பெரும் பாலும் ஈழத்தையே தாக்கியது இந்த கடல் கோளின் பின்தான் தொண்டமானாறு என்ற பெயர் வந்ததாகவும் வரலாறு இருக்கிறது .இந்த கடல் கோளின் பொழுதுதான் ஈழத்து வடபகுதி தீவுகளான ,வேலணை தீவு ,புங்குடுதீவு ,நயினாதீவு ,நெடும்தீவு ,அனலைதீவு ,எழுவைதீவு ,மண்டைதீவு ,காரைதீவு ,கச்சை தீவு ,ஆகிய தீவுகள் பிரிந்து இருக்கலாம் என்பது எனது கருதுகோள் .எதிர்காலத்தில் தகுந்த ஆதாரங்களுடன் இதை வரலாற்று மாணவர்கள் ஆய்வாளர்கள் உறுதி படுத்துவார்கள் ஆனால் அதற்கு நான் தலை வணங்குவேன் என்பதையும் இன்றே எழுதி வைக்கின்றேன் .,,
யாழ் தீவுகள் எவை எத்தனை என்பது பற்றி சிறு விளக்த்தை அளிப்பதோடு அடுத்த பகுதியில் தனித்தனி சிறு தீவுகளாக பிரிந்த ஒவ்வொரு தீவுகளும் அந்த தீவுகள் அமைந்துள்ள இடமும் எவ்வாறு வரலாறுகளோடும் வாழ்வியலோடும் சம்பந்த பட்டு இருக்கிறது என்பதை விரிவாக பார்ப்போம் (தொடரும்)
நன்றியுடன் சிவமேனகை
வாசிக்க வாசிக்க மென்மேலும் ஆவலைத்தூண்டுகிறது. அடுத்து எப்போ தொடரும்? மிக்க நன்றி.