யாழ் தீவுகள் உருவான வரலாறு – பகுதி 01
இதற்கு ஆதாரமாக கந்த புராணத்தில் சப்த தீவுகளுக்கும் தீவுகள் என்ற பெயர் இல்லாமல் அந்த தீவு இருக்கின்ற இடங்களுக்கு நகரத்துக்கு உரிய சிறப்பு பெயர்களே சூட்டபட்டுள்ளது .அந்தவகையில் ,இன்றைய வேலணை தீவு ,சூசை என்றும் புங்குடுதீவு ,கிரவுஞ்சம் ,என்றும் நயினாதீவு ,சம்பு என்றும் ,காரைதீவு ,சாகம் என்றும் ,நெடும்தீவு புட்கரம் என்றும் ,அனலை தீவு கோமேதகம் ,என்றும் ,எழுவை தீவு ,இலவு என்றும் கூறப்பட்டு உள்ளது ,ஏனைய மண்டைதீவு ,கச்சைதீவு ,பற்றிய இடங்களுக்கு எந்த பெயரும் குறிப்பிடப்படவில்லை.
இன்றைய சப்த தீவுகளும் ஏனைய தீவுகளும் எப்பொழுது எவ்வாறு உருவாகியது என்பதை பற்றி ஆராய்து பார்பதற்கு காலத்துக்கு காலம் வந்ததாக கருதப்படும் கடல் கோள்களின் பாதிப்புகளையும் அதனோடு தொடர்புபட்ட வரலாறுகளில் எமது தீவுகளின் பெயர் தீவாக வருகின்றதா என்பதையும் ஆராய்ந்து பாப்போம். கி.மு 6087 இல் இன்னொரு மிகப்பெரிய கடல் கோள் ஏற்பட்டதாக கருதப்படுகின்றது இந்த அடல் அழிவில் தான் சூரன் ,முருகன் ,ஆதிசேடன் ,குபேரன் ,இராவணன் ,,,பின் வீடணன் பரம்பரை ஆண்ட மிகப்பெரிய இலங்கையின் பெரும் பகுதி அழிந்ததாக கருத இடம் உண்டு .இந்த கடல் அழிவில் மகேந்திர மலை ,மணி மலை ,போன்ற மலைகள் அழிந்தும் பல நதிகள் கடலோடு முழுமையாக சங்கமமாகியும் இருக்கலாம் .இந்த கடல் அழிவில் போதே குமரி கண்டம் முழுமையாக கடலில் மூழ்கியதாக கூறப்படுகின்றது.
இந்த கடல் அழிவின் போது யாழ் தீவுகள் யாழில் இருந்து பிரிந்திருக்குமா என்று பல்வேறு வழிகளில் சிந்தித்து பார்த்தால் இது ஒரு மிகப்பெரிய ஆபத்தான சமுத்திரங்கள் இணைந்து கோர தாண்டவம் ஆடிய மிக பெரும் கடல் அழிவாகவே ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள் .பெரும் மலைகள் கூட பெயர்த்து எடுத்த கடல் அழிவு இந்த அழிவில் இருந்து சிறு தீவுகள் தப்பி இருக்குமா,,,அல்லது சிறுதீவுகள் சார்ந்த இடப்பரப்பு உருவாக்கி இருக்குமா .. என்ற சந்தேகம் எழும் அதேவேளை ,அதற்க்கு பின் வந்த வரலாற்று நிகழ்வுகளிலும் இந்த தீவுகள் பற்றி தனித்துவமாக தீவுகளாக வரலாறுகளில் இல்லை .
வாசிக்க வாசிக்க மென்மேலும் ஆவலைத்தூண்டுகிறது. அடுத்து எப்போ தொடரும்? மிக்க நன்றி.