யாழ் தீவுகள் உருவான வரலாறு – பகுதி 01
எனவே மணிமலையும் நீண்டதொரு மலை தொடராக நாகநாட்டில் இருந்து இருக்கலாம்.அடுத்து சங்ககால வரலாறுகளில் யாழ் குடாநாடு மணிபல்லவம் என்று அழைக்கப்பட்டது என்று கருத்துக்கள் இருக்கிறது.அதேவேளை மணிமேகலை காப்பியம் சொல்லும் மணிபல்லவம் நயினாதீவு தான் என்பதில் பல உறுதியான ஆதாரங்கள் இருக்கிறது.அதை இந்த கட்டுரையில் யாழ் தீவுகள் பிரிந்ததாக நான் முன்வைக்க போகும் கால்பகுதி மேலும் நிரூபிகின்றது.அதனால் தீவுகள் பிரிந்த பின்னர் எழுந்த இலக்கியங்களில் வரும் மணிபல்லவம் நயினாதீவு என்று கொள்ளலாம். ஆனால் நாகதீபம் என்று நாகர்கள் ஆண்ட ஈழத்தின் வடபகுதி முழுவதையும் குறிக்கும் இடத்தின் வரலாற்றையும் ,தீவுகள் பிரிவதற்கு முன்னர் எங்காவது இலக்கியத்தில் மணிபல்லவம் என்று குறிப்பிட்டு எழுதப்பட்டு இருந்தால் அந்த முழுமையான வரலாறும் இன்றைய நயினாதீவுக்கு சொந்தமானது அல்ல .ஆனால் தீவுகள் பிரிந்ததாக நான் மேற்கோள் காட்டப்படும் காலத்துக்கு பின்னரான இலக்கியங்களில் தான் அனேகமாக மணிபல்லவம் என்ற சொல் பாவிக்க பட்டு இருக்கிறது என்பது இதுவரை அறிந்த குறிப்புகள் மூலம் அறியவருகின்றது.
அதேவேளை இன்னொரு முக்கிய விடயத்தை குறிப்பிட வேண்டும் அதாவது பல்லவர்கள் தென்னிந்தியாவுக்கு குறிப்பாக நான் இங்கு தீவுகள் பிரிந்ததாக முன்வைக்க போகும் காலத்தில் தான் சென்றார்கள் என்பதால் இந்த கடல் அழிவால் பெரும் பாலும் பாதிக்க பட்டவர்கள் இன்றைய யாழ் தீவு மக்கள் தான் என்று வரலாறு கூறுவதால் அந்த பல்லவர்கள் தீவு பகுதி மக்களாக இருக்கலாம்.
கந்த புராண காலத்துக்கு பிற்பட்ட காலத்தில் கார்த்த வீரியார்சுணன் ,விஸ்வகர்மா,மயன் , ஆதிசேடன் ,வாசுகி ,சுமாலி ,குபேரன் ,இராவணன் ,வீடணன் ஆண்ட இலங்கையும் இன்றைய இலங்கையை விட மிக பெரிய நிலப்பரப்பையும் பல்வேறு மலைகளையும் ,நதிகளையும் கொண்ட இலங்கை என்று சொல்லபடுகின்றது .இலங்கையின் பூகோள அமைப்பையும் சமுத்திரங்களால் தாக்கங்கள் ஏற்பட கூடிய நிலையில் அமைந்து இருப்பதையும் பின்வந்த கடல்கோள்கள் அவற்றை உறுதி படுத்துவதையும் வைத்து இவற்றை உண்மை என்று நம்பலாம் .இந்த வரலாற்று காலங்களிலும் இலங்கையில் வடபகுதியில் இருந்த சிறு தீவுகள் பற்றிய குறிப்புக்கள் எங்கும் இல்லை .அதனால் அந்த காலத்தில் இன்றைய வடபகுதி சப்த தீவுகளும் ஏனைய சிறு தீவுகளும் யாழ்ப்பாண நகரோடு இணைந்து பெரு நகரங்களாக இருந்து இருக்கிறது என்றே கருதப்படுகின்றது .
வாசிக்க வாசிக்க மென்மேலும் ஆவலைத்தூண்டுகிறது. அடுத்து எப்போ தொடரும்? மிக்க நன்றி.