யாழ் தீவுகள் உருவான வரலாறு – பகுதி 01
இதுவே புராணங்கள் கூறும் ஊழி காலத்தில் ஏற்பட்ட பெரும் கடல் அழிவு என்றும் நாம் கூறலாம்.இன்றைய யதார்த்தவாதிகளும் ஆன்மீக கருத்துக்களை எதிர்பவர்களும் புராணங்கள் இதிகாசங்கள் முழுமையான புனைவுகள் என்று கடினமான எதிர்கருத்துக்களை முன்வைக்கும் அதே வேளை நாசா விஞ்ஞானிகளும் மேலைத்தேச ஆய்வாளர்களும் புராணங்களை தங்கள் மொழிகளில் மொழி பெயர்த்து அதில் உள்ள கருத்துக்களை ஆய்வு செய்கின்றார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை.
எனது கருத்தின்படி கி மு 9583 இல் உருவாகிய இலங்கையில் சிறு தீவுகள் இருந்ததாக வரலாற்று குறிப்புக்கள் இல்லை .இலங்கையின் வரலாற்றை முதல் முதலில் கந்த புராண வரலாற்று குறிப்பில் தான் அறியப்படுகின்றது .பலர் இவை கற்பனை என்று வாதிட்டாலும் .கந்த புராணத்தை ஆய்வு செய்து விளக்கவுரைகள் எழுதிய தமிழ் பண்டிதர்கள் அந்த கதையில் பல உண்மைகள் இருப்பதாகவே இதுவரை கருத்து கூறி இருக்கின்றார்கள் .அந்தவகையில் அவர்கள் கருத்துபடி கந்த புராண வரலாறு நடந்ததாக கருதப்படும் காலம் அண்ணளவாக .கி மு 9000 ஆக இருக்கலாம் என்று பண்டிதமணி சின்னதம்பி ,பண்டிதமணி கணபதிபிள்ளை ,பண்டிதர் ஸ்ரீலஸ்ரீ செந்திநாதையர் ,போன்றவர்கள் தங்கள் வரலாற்று குறிப்புக்களில் கூறி இருக்கின்றார்கள் .இலங்கை என்று ஒரு தனி நாடும் முதன் முதலில் கந்த புராண வரலாறு நடந்ததாக கூறப்படும் காலத்தில் தான் வருகின்றது .சூரன் அரசாண்டதாக கூறப்படும் இலங்கையின் தலை நகராக மகேந்திர மலை தான் குறிப்பிடப்படுகின்றது.
சூரனுடைய மனைவியாக வரும் பதும கோமளை, மணிமலை நாகர்குல இளவரசி என்றே கூறப்படுகின்றது. மணி மலை வடகடலில் மூழ்கிய ஒரு மலையாக வரலாற்றில் கருதப்படுகின்றது அப்படியானால் ஈழத்தில் வட பகுதியை நாகர்கள் ஆண்டார்கள் என்ற கருத்தும் இங்கே முன்வைக்கபடுகின்றது .ஆனால் இந்த மகேந்திர மலை இன்று இல்லை அது அம்பாந்தோட்டைக்கு கீழ் கடலில் மூழ்கிவிட்டதாக கருதப்படுகின்றது .மணி மலை என்ற ஒரு மலை இன்றைய கீரி மலை சார்ந்த பிரதேசம் என்று சிலர் கருத்து கூறி இருக்கின்றார்கள் .உண்மையில் மணி மலையின் எச்சமாக கீரிமலை இருக்கலாம்.அதேவேளை இன்றைய நயினாதீவின் தென் கிழக்கு முனையின் உயரமான நிலப்பகுதி பகுதி மலை அடி என்றே காலம் காலமாக அழைக்கப்பட்டு வருகின்றது.அதை அண்மித்த காட்டு பகுதி மலையன்காடு என்ற பெயரிலும் அழைக்கபடுகின்றது.இதையும் ஒரு சிறு குறிப்பாகமுன்வைக்கின்றேன்.
வாசிக்க வாசிக்க மென்மேலும் ஆவலைத்தூண்டுகிறது. அடுத்து எப்போ தொடரும்? மிக்க நன்றி.