யாழ் தீவுகள் உருவான வரலாறு – பகுதி 03
துறைமுகம், கோவில்கள், பாடசாலைகள், வைத்திய சாலை, நீதி மன்றம், தபாலகம், நூலகம் ,சந்தை ,சிறு தொழில் நிறுவனங்கள் என சகல வசதிகளும் கொண்டு சிறப்பாக இயங்கிவந்த காவலூர் வாழ்ந்த மக்களும் போர் தந்த வடுக்களால் இடம் பெயரவும் புலம்பெயரவும் வேண்டிய நிற்பந்தம் 1990 களில் ஏற்பட தொடங்கியது. அன்னை மண்ணை பிரிந்து வாழும் துர்பாக்கிய நிலைக்கு அந்த மக்களும் தள்ளப்பட்டார்கள். இடம் பெயர்ந்து பல்வேறு தேசங்களிலும் பல்வேறு இடங்களிலும் அவர்கள் வாழ்ந்தாலும், தங்கள் கலை கலாசாரம் பாரம்பரிய நிகழ்வுகளை மறவாத மக்களாக தரணி எங்கும் அவர்கள் வாழ்கின்றார்கள். தாய் நிலத்தில் வாழும் மக்களுக்கும் தங்கள் கிராம முன்னேற்ற பணிகளுக்கும் பல்வேறு வழிகளில் அமைப்புக்கள் ஊடாகவும் தனிப்பட்ட முறையிலும் பல உதவிகளை புரிந்து, போரினால் பெரிதும் பாதிக்கபட்ட அன்னை மண்ணை மீளவும் சிறப்பாக செயல்பட உதவியாக இருக்கின்றார்கள்.
இயற்கை அழகும், கடல் வளமும், துறைமுகமும் சகல வளங்களும் கொண்ட காவலூர் மக்கள், கல்வி அறிவும், கலை நயமும், சமுதாய நலன்களில் அக்கறையும் கொண்டவர்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். ஈழ வரலாற்றில் காவலூரும் பல்வேறு வரலாற்று நிகழ்வுகளை நிறுவி இருக்கிறது என்பதும் பெருமைபடதக்க விடயம் ஆகும் .
வேலணை தீவின் ஏனைய கிராமங்களின் வரலாற்று நிகழ்வுகளையும் சிறப்புகளையும் ஏனைய தீவுகள் பற்றிய வரலாற்று பின்னணியையும் அடுத்தடுத்த பகுதிகளில் என்னால் முடியுமானவரை ஆராய்ந்து பார்ப்போம்.
நன்றியுடன் சிவமேனகை