யாழ் தீவுகள் உருவான வரலாறு – பகுதி 02
உலக வாழ்வியல் நீரோட்டத்தில் ஈழதமிழர்களுக்கு ஈழத்தில் நடந்த இன்னல்கள் போன்ற பல்வேறு காரணங்களால் இங்கு வாழ்ந்த மக்களும் இன்று பலர் உலகெங்கும் இடம்பெயர்ந்து வாழ்கின்றார்கள் அவ்வாறு வாழ்ந்தாலும் தாய் நிலத்தை மறவாத மழலைகளாய் இருகின்றார்கள் என்பதை பதிவு செய்து தொடர்கின்றேன். நாரந்தனை இதுவும் வேலணை தீவின் அகத்தில் வரும் ஒரு முக்கிய கிராமம் ஆகும் .இந்த கிராமத்துக்கு இந்த பெயர் வர காரணமாக சங்க கால போர் படை தலைவனாக நாராயணன் என்ற பெயருடையவன் தானை நின்று போரிட்ட இடம் நாரந்தனை என்று அழைக்கப்படுகின்றது. பெயர் வர வேறு தகுந்த காரணங்களும் இருக்கலாம் என்னால் அவற்றை அறிய முடியவில்லை.
இந்த கிராமத்து மக்களின் முக்கிய தொழிலாக விவசாயம் கருதப்படுகின்றது. மீன்பிடி தொழிலில் வருவாய் ஈட்டும் மக்களும் இங்கு இருக்கின்றார்கள். கால மாற்றத்தில் பல்வேறு பகுதிகளில் நகர்ந்து சென்று தொழில் வாய்ப்பு பெற்றவர்களும், தொழில் நிறுவனங்களை அமைத்தவர்களும் இருக்கின்றார்கள். இன்றைய நிலையில் அரசின் முக்கிய துறைகளில் பணி புரிபவர்களும் இங்கு வாழ்கின்றார்கள். வழிபாட்டு முறைகளில் அம்மன், முருகன் குல தெய்வ வழிபாட்டையும், கத்தோலிக்க தேவாலய வழிபாட்டையும் கொண்ட மக்கள் இங்கு இருக்கின்றார்கள் .அவற்றுக்கு ஆதாரமாக, இங்கு இருக்கும் கோவில்களான நாரந்தனை தான்தோன்றி அம்மன் கோயில், கர்ணன் தோட்டம் கந்தசாமி கோயில், தம்பட்டி முத்துமாரியம்மன் கோயில், புனித பேதுரு புனித பவுல் தேவாலயம், திரு இருதயநாதர் தேவாலயம், புனித லூர்து அன்னை தேவாலயம் ஆகியவற்றை குறிப்பிடலாம். அடுத்து கல்வி வசதிகள் பற்றி பார்ப்போமானால் யா/நாரந்தனை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை, நாரந்தனை யா/நாரந்தனை வட கணேச வித்தியாலயம், நாரந்தனை
யா/தம்பாட்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ஆகிய மூன்று பாடசாலைகள் இங்குள்ள பிள்ளைகளில் கல்வி வளர்சிக்கு பெரிதும் உதவுகின்றது .இந்த கிராமத்தில் நாரந்தனை வடக்கு, நாரந்தனை வட மேற்கு, நாரந்தனை தெற்கு, என கிராம சேவகர் பிரிவுகள் இருக்கிறது. மேலும் ஏனைய சாதாரண வசதிகள் கொண்ட இந்த கிராம மக்களும் ஈழத்தின் போரியல் சூழ்நிலைகளால் உலகெங்கும் இடம் பெயர்ந்து வாழும் நிலை ஏற்பட்டது.இவ்வாறு இடம் பெயர்ந்து வாழும் இந்த கிராம மக்களும் தாம் வாழும் தேசங்களில் கலை பண்பாட்டு பாரம்பரிய கலாசாரங்களை பின்பற்றி வருவதோடு தமது கிராம நலன்களிலும் அக்கறை உடையவர்களாக இருக்கின்றார்கள்.
Excellent effort.I am anxiously awaiting further research articles from you.i am at the moment involved in compiling a book titled ” A Recorded history of Kayts (Leyden ) Island” to be released by next March.
If you need a copy, please be in touch with me.I will mail you one as soon as it is printed.
Rajabalan B.Sc(Hons), Diploma in Accounting (Canada)
Thank you. keep us posted 🙂