யாழ் தீவுகள் உருவான வரலாறு – பகுதி 02
சுருவில் வேலணைத்தீவின் ஒரு முதன்மையான கிராமம் ஆகும். இந்த கிராமம் வளைந்த வில் வடிவில் இருந்ததால் சுருவில் என்று பெயர் பெற்றதாக வரலாறுகள் சொல்கின்றன .இந்த கிராமத்தில் பல செல்வந்தர்கள் இருந்தார்கள் என்ற காரணத்தால் ஒரு காலத்தில் ஈழத்தமிழர்களுக்கு அமெரிக்காவின் உண்மை நிலை அறியாத காலத்தில் இதனை குட்டி அமெரிக்கா, என்று அழைத்தார்கள். இங்கு உண்மையாக தொழில் அதிபர்களும் பெரும் பணம் படைத்தவர்களும் இருக்கின்றார்கள் .அமேரிக்கா போன்று உலகெங்கும் பில்லியன் கணக்கில் கடன் வைத்து இருப்பவர்கள் இல்லை இங்கு உள்ளவர்கள். அதனால் நான் அந்த கூற்றை மறுக்கின்றேன். அது ஈழத்தில் சுருவில் ஆகவே இருக்கட்டும். இந்த கிராமம் கடல் மட்டத்தில் இருந்து 5 மீற்றர் உயரத்தில் இருப்பதாகவும் 2500முதல் 3000 மக்கள் வரை இங்கு வசிப்பதாகவும் தகவல்களில் அறியமுடிகின்றது.
அன்னியர் வருகைக்கு முறைப்பட்ட காலத்தில் இங்கு வாழ்ந்தவர்கள் கடல் வழி வர்த்தகத்தில் தலை சிறந்தவர்களாகவும், சிறந்த கடல் ஓடிகளாகவும் இருந்ததாக கூறப்படுகின்றது. கடல் வழி போக்குவரத்துக்கு இங்கு ஒரு துறைமுகமும் சிறப்பாக இவர்களுக்கு உதவியது .அன்னியர் வருகைக்கு பின்னரும் இலங்கையில் பல்வேறு பகுதிகளில் வியாபார நிறுவனங்களை உருவாக்கி தங்கள் பொருளாதாரத்தை இலங்கையில் உச்ச நிலையில் வைத்து இருந்தவர்கள் இவர்கள் .உள்ளூரில் விவசாயத்தையும், கடல் தொழிலையும் .முக்கிய தொழிலாக கொண்டு இருந்தார்கள் .
இங்கு வாழ்ந்த மக்களுக்கிடையில் யாழ்ப்பாண சமுகத்தின் ஏற்றத்தாழ்வு சாதி முறை ஆரம்பகாலத்தில் இருந்தாலும் பொருளாதார முறையில் பல காலத்துக்கு முன்னமே சமநிலை அடைந்த ஒரு கிராமமாக விளங்கியதால் அந்த முறைமை மிகவும் குறைந்த கிராமமாக இந்த கிராமத்தை கூறலாம்.
இங்கு ஐயனார், அம்மன், வைரவர் குலதெய்வ வழிபாடாக கொண்ட மக்கள், போர்துகேயர்காலத்தில் உருவான கத்தோலிக்க அன்னை மேரி ஆலய வழிபாட்டையும் மேற்கொண்டார்கள். கல்வி கற்பதற்காக இங்கு 5 வகுப்புவரை கொண்ட அன்னைமேரி பாடசாலை கல்வி வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகின்றன. மேற்கல்விக்கு எல்லை கிராமங்களுக்கோ அல்லது வெளி கிராமங்களுக்கோ செல்ல வேண்டும். கிராம அபிவிருத்தி சபை, தையல் நிலையம், பப்பட தொழிற்சாலை ஆகியவை முன்னர் இயங்கி வந்தன. ஈழப் போரின் காரணமாக அவற்றின் தற்போதைய நிலை பற்றி தெளிவான விபரங்கள் இல்லை. மேலும், மக்கள் வசதிக்காக கூட்டுறவுக்கடையும், உபதபாற்கந்தோரும் இருந்தது .இந்த கிராமம் ஒரு கிராம சேவகர் அலகாகவே பிரிக்கப்பட்டு உள்ளது.
Excellent effort.I am anxiously awaiting further research articles from you.i am at the moment involved in compiling a book titled ” A Recorded history of Kayts (Leyden ) Island” to be released by next March.
If you need a copy, please be in touch with me.I will mail you one as soon as it is printed.
Rajabalan B.Sc(Hons), Diploma in Accounting (Canada)
Thank you. keep us posted 🙂