யாழ் தீவுகள் உருவான வரலாறு – பகுதி 02
தீவுகளில் பெரியதீவாகவும் பல கிரமாங்களை தன்னுள் அடக்கி பல வரலாற்று சிறப்புக்களோடும் விளங்கின்றது வேலணை தீவு. இந்த தீவு யாழ் குடாநாட்டுக்கு தென்மேற்கு திசையில் உள்ளது. சுவாமி ஞானப்பிரகாசரின் வரலாற்றுக் குறிப்பொன்று இதை தணதீவு எனக் குறிப்பிடுகிறது. இன்று ஆங்கில மோகமும் மேலைத்தேச மோகமும் கொண்ட எம் தமிழர்களால் இந்த தீவை லைடன் தீவு என்றும் அழைகின்றார்கள். அதாவது ஒல்லாந்தர் ஆட்சிகாலத்தில் ஈழத்தில் பல இடங்களுக்கும் ஒல்லாந்து நகர்களின் பெயர்களை வைத்தார்கள், அந்தவகையில் வேலணை தீவுக்கு தெற்கு ஒல்லாந்தின் ஒரு நகரின் பெயரான லெய்டன் என்ற பெயரை வைத்தார்கள் .அது ஈழத்து பேச்சுவழக்கு தமிழில் லைடன் ஆக மாற்றம் பெற்று வழங்கப்பட்டு வருகின்றது. ஈழதேசம் அன்னியரிடம் இருந்து விடுதலைபெற்று பல பத்து ஆண்டுகள் ஆனாலும் இன்னும் அவர்கள் திணித்த அந்நிய சொற்கள் எங்கள் நாவில் இருந்து விடுதலை பெறவில்லை.
இந்த தீவுக்கு வேலணை என்று பெயர் வருவதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றது. வேல் அணைந்த இடம் வேலணை என்றும் வேலன் ஆண்ட இடம் வேலணை என்றும்,சங்க கால போர் வீரன் வேலவன் தானை நின்று போரிட்ட இடம் வேலணை என்றும், வேலன் என்ற ஒரு தென்னிந்திய மன்னன் கடம்பன் என்ற கடல் கொள்ளையனை துரத்தி வந்து இங்குவைத்து பிடித்து கொன்ற இடம் என்று வெண்ணிலா பெண்ணரசி என்ற நாவலில் குறிப்பிடபட்டுள்ளது. அதனால் இந்த பெயர்வந்தது என்றும் கருத்துக்கள் இருக்கிறது. பொதுவாக இந்துக்கள் எல்லோரும் ஏற்றுகொள்ளும் கருத்து இங்கு முருகவழிபாடு மிக சிறப்பு பெற்று இருந்ததாலும் வேல் அணைந்ததாலும் வேலணை என்ற பெயர்வந்து என்பதைத்தான் என்று கருதுகின்றேன்.
வேலணை என்ற பெயர் கொண்டு இந்த தீவு அழைக்கப்பட்டாலும் பின்வரும் 10 கிராமங்களை உள்ளடக்கிய ஒரு இடத்துக்கே வேலணைத்தீவு என்று பெயர்வைத்து இருக்கின்றார்கள். அதில் வேலணை கிராமமும் ஒன்றாகும்.
1.சுருவில்
2.நாரந்தனை
3.கரம்பொன்
4.ஊர்காவற்றுறை (காவலூர்)
5.பரித்தியடைப்பு
6.புளியங்கூடல்
7.சரவணை
8.வேலணை
9.அல்லைப்பிட்டி
10. மண்கும்பான்
Excellent effort.I am anxiously awaiting further research articles from you.i am at the moment involved in compiling a book titled ” A Recorded history of Kayts (Leyden ) Island” to be released by next March.
If you need a copy, please be in touch with me.I will mail you one as soon as it is printed.
Rajabalan B.Sc(Hons), Diploma in Accounting (Canada)
Thank you. keep us posted 🙂