ஆசிரியர் – திரு .நா .இளையதம்பி
வேலணையில் ஆசிரியர்த் தொழிலில் ஈடுபட்டவர்களில் இவர் முன்னோடியாகத் திகழ்கிறார் . 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தொடங்கிய இவரது ஆசிரியப் பணி இந்நூற்றாண்டின் நடுப்பகுதி வரை நீடித்தது . இவரது ஆசிரியப் பணியின் மிகக்கூடிய பகுதி வேலணையில் அமெரிக்கன் மிஷன் பாடசாலையிலே இடம்பெற்றது. இவர் பெரும் எண்ணிக்கையான மாணவர்களுக்கு கல்வி கற்பித்ததால் இவரை வேலணைக் கிராம மக்கள் “பெரிய உபாத்தியாயர்” என்று அழைத்ததுடன் அவர்களின் மரியாதைக்குரியவராகவும் இருந்தார்.
இவர் பெரும் எண்ணிக்கையான மாணவர்களுக்கு கல்வி கற்பித்ததால் இவரை வேலணைக் கிராம மக்கள் “பெரிய உபாத்தியாயர்” என்று அழைத்ததுடன் அவர்களின் மரியாதைக்குரியவராகவும் இருந்தார்
இவர் 1888 ஆம் ஆண்டு வேலணையில் பிறந்து தமது இளமைக் கல்வியை வேலணை அமெரிக்கன் மிஷன் பாடசாலையில் கற்று பின்னர் கோப்பாய் ஆசிரியர் பயிட்சிக் கலாசாலையில் சேர்ந்து பயிற்றப்பட்ட ஆசிரியராக வெளியேறினார். இவரது ஆசிரியர்ப் பணி சிறந்ததாக இருந்ததால் அமெரிக்கன் மிஷனரியினர் இவரை வேலணைப் பாடசாலையின் அதிபராக நியமித்தனர். இவர் ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்பும் தொடர்ந்து கிராமத்தில் வாழ்ந்து கிராமிய மக்களுக்கு பல வழிகளிலும் உறுதுணையாக இருந்தும் தலைமைத்துவம் கோடுத்தும் வாழ்ந்தார்