திரு .அருணாசலம் வைரமுத்து
செந்நெல் கழனிகளும் தொட்ட வெளிகளும் சூழ்ந்த சரவணை கிழக்கில் பள்ளம் புலமெனும் கிராமத்தில் அருணாசலம் வல்லியம்மைப்பில்லை தம்பதிகளுக்கு ஆறாவது மகவாக 1910 ஆம் ஆண்டு சித்திரை பதினான்காம் திகதி அன்று முருகனருளால் இப்புவியில் அவதரித்தார்.
வைரமுத்து தனது கல்வியை அக்காலத்தில் சிறந்துவிளங்கிய கந்தப்பர் பாடசாலையில் (சைவப்பிரகாசா வித்தியாசாலையில்) மேற்கொண்டார். திருநெல்வேலியில் அமைந்திருந்த சைவ ஆசிரியர் கலாசாலையில் கற்று ஆசிரியப் பயிட்சியை பெற்று தனது பத்தொன்பதாவது வயதில் ஆசிரியத்தொழிலை மேற்கொண்டார். ஆசிரியராகத் திகழ்ந்துவரும் காலத்தில் இவரின் அளப்பெரிய சேவையினாலும் திறமையினாலும் இவரை 1931 ஆம் ஆண்டில் இருந்து சைவப்பிரகாசா வித்தியாசாலையின் தலைமை உபாத்தியாயராக பதவிஉயர்த்தப் பட்டு அன்றிலிருந்து நாற்பது வருடம் பல இன்னல்கள் ,இடையூறுகளுக்கு மத்தியில் தலைமை உபாத்தியாயராக பணி புரிந்ததனால் இவர் சதா தலைமையாசிரியர் என எல்லோராலும் போற்றுதலுக்கும் உள்ளானார்.