திரு .அம்பலவாணர் செல்லையா
செல்லையா அம்பலவாணர் (1908 மார்ச், 03) வேலணையிற் பிறப்பிடமாக கொண்ட சிறந்த கல்வியியலாளர். இவர் அதிபராகவும், கிராமச் சங்கத்தின் தலைவராகவும் கடமையாற்றியுள்ளார். 40 ஆண்டுக்கால நீண்ட ஆசிரியப் பணியானது ஊரில் அவருக்கு பெரிய வாத்தியார் என்ற பட்டத்தை பெற்றுக் கொடுத்தது.
கிராம சங்கத்தின் தலைவராக இருந்த காலங்களிலும் கூட ஒழுங்கைகளை அகன்ற வீதிகளாக மாற்றியமை, குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க நன்னீர்க் கிணறுகள் தோண்டியமை போன்ற பல்வேறு சேவைகளை செய்தார்.